நெஞ்செரிச்சல், அசிடிட்டிக்கு பயன்படுத்தப்படும் மருந்து குறித்து எச்சரிக்கை: புற்றுநோய் காரணி இருக்கிறதா?

நெஞ்செரிச்சல், அசிடிட்டிக்கு பயன்படுத்தப்படும் மருந்து குறித்து எச்சரிக்கை: புற்றுநோய் காரணி இருக்கிறதா?
Updated on
1 min read

அமெரிக்காவின் சக்தி வாய்ந்த எஃப்.டி.ஏ. (உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு), சமீபத்தில் பிரான்ஸ் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் நெஞ்செரிச்சல், அசிடிட்டி மற்றும் அல்சருக்கான மருந்தான ‘ஸாண்டாக்’ குறித்து எச்சரிக்கை விடுத்தது.

அதாவது ஸாண்டாக்கில் என்.டி.எம்.ஏ என்று அழைக்கப்படும் நைட்ரோசோடிமெதிலமைன் என்ற ரசாயனப்பொருள் இருப்பதாகவும் இது புற்று நோயை உருவாக்கும் காரணி என்றும் அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு கழகம் தெரிவித்துள்ளதையடுத்து.

இந்தியாவிலும் பிரபல ‘ரேனிடிடின்’ என்ற மாத்திரைகள் குறித்த சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய மருந்துத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பைக் கட்டுப்படுத்தும் இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டுக் கழகம் ரேனிடிடின் மாத்திரைகளை சோதிக்குமாறு பல்வேறு மாநிலங்களிம் மருந்துக் கட்டுப்பாட்டு கழகங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

இந்த ரேனிடிடின் மாத்திரைகள் இதே பெயரில் மருந்துக் கடைகளில் கவுண்டரில் விற்கப்படுகிறது, இது ராண்டாக் என்று ஜே.பி.கெமிக்கல்ஸாலும், ஸிண்டேக் என்று கிளாக்ஸோவாலும் அசிலாக் என்று கெடிலா நிறுவனத்தாலும் இன்னும் பல பிராண்டுகளிலும் விற்கப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த மருத்துவ வணிகப்பெயர்கள் கொண்ட மாத்திரைகள் மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில்தான் விற்க வேண்டும். இதுவும் ஓவர் த கவுண்டரில் விற்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த மருந்தில் புற்று நோய் காரணிகள் இருக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளதால் சோதனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in