

புதுடெல்லி
ஜெர்மனி, இத்தாலி, கத்தார் உள்ளிட்ட நாடுகளின் தலைவர் களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்துப் பேசினார்.
ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்க 7 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென் றுள்ளார். அங்கு நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற தீவிரவாத தடுப்பு தொடர்பான மாநாட்டில் அவர் பங்கேற்றார்.
அவர் பேசிய போது “தீவிர வாதத்தில் நல்ல தீவிரவாதம், மோச மான தீவிரவாதம் என எதுவும் இல்லை. தீவிரவாதம் என்றாலே தீவிரவாதம்தான். தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி, ஆயுதங் கள் கிடைப்பதை தடுத்தால் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த முடியும். இதற்கு உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண் டும்” என்று தெரிவித்தார்.
பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டை குற்றம் சாட்டி பேசினார்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல், இத்தாலி பிரதமர் கிஸாபே கான்டி, கத்தார் இளவரசர் ஷேக் தமீம் பின் ஹமீது, கொலம்பியா அதிபர் இவான் டூகியு மார்கஸ், நைஜீரிய அதிபர் இசுபு மகாமாதோ, நமீபியா அதிபர் ஹாகே ஜியின்கோப், மாலத் தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோலி, பூடான் பிரதமர் லோடாய் ஷெரிங், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே உள்ளிட்டோரை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புகளின்போது வர்த்தக, பாதுகாப்பு உறவை மேம்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
யுனிசெப் அமைப்பின் செயல் இயக்குநர் ஹென்ரிட்டா போரேவை யும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா வில் குழந்தைகளின் ஊட்டச் சத்து குறைபாட்டை போக்க எடுக் கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளை அவர் விவரித்தார்.