

என்.மகேஷ்குமார்
திருமலை
ஆந்திராவில் ஜெகன்மோகன் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றதை தொடர்ந்து, திருமலை திருப்பதி தேவஸ்தானத் தின் அறங்காவலர் குழு தலைவ ராக ஒய்.வி.சுப்பாரெட்டி நியமிக் கப்பட்டார்.
இதையடுத்து 4 அதிகாரிகள் உட்பட 28 உறுப்பினர்கள் கொண்ட புதிய அறங்காவலர் குழுவை ஜெகன்மோகன் அரசு அண்மை யில் நியமித்தது. பிறகு இக்குழுவில் சிறப்பு உறுப்பினர்களாக திருப்பதி எம்எல்ஏ கருணாகர் ரெட்டி, தொழிலதிபர் சேகர் ரெட்டி உள் ளிட்ட 7 பேர் நியமிக்கப்பட்டனர்.
புதிய அறங்காவலர் குழுவைச் சேர்ந்த 4 அதிகாரிகள் உள்ளிட்ட 24 உறுப்பினர்களும் சேகர் ரெட்டி உள்ளிட்ட 7 சிறப்பு உறுப்பினர் களும் நேற்று, ஏழுமலையான் கோயிலில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதையடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 50-வது அறங்காவலர் குழுவின் முதல் கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி பின்னர் கூறும்போது, “திருமலை யில் குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்ப்பதற்காக பாலாஜி அணை கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும். தேவஸ்தான ஊழியர்களின் பிரச்சினையை தீர்க்க துணைக் குழு அமைக் கப்படும்” என்றார்.