மொபைல் விளையாட்டுக்களில் ஆண்களைவிட பெண்களுக்கே அதிக ஆர்வம்: மனஅழுத்தம் நீங்குவதே காரணம்: சைபர் மீடியா தகவல்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

குருக்கிராம்,

இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் மொபைல் விளையாட்டுக்களில் அதிக ஆர்வம் காட்டி வருவதற்கான காரணம் அவர்கள் மன அழுத்தங்களை இந்த விளையாட்டுக்கள் போக்குவதாக மின்னணு ஊடக ஆராய்ச்சி நிறுவனமான சைபர் மீடியா தெரிவித்துள்ளது.

இந்தியாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் சைபர் மீடியா தெற்காசியாவின் மிகப்பெரிய மின்னணு ஊடக ஆராய்ச்சி மற்றும் சேவை நிறுவனமாகும். இந்த நிறுவனம் செல்போனில் உள்ள விளையாட்டு செயலிகளில் அதிகம் ஈடுபாடு செலுத்துவது யார் என்று சமீபத்தில் ஒரு ஆராயச்சியை நடத்தியது.

சைபர் மீடியா ஆராய்ச்சியின் தொழில்துறை புலனாய்வுக் குழுவின் தலைவர் பிரபுராம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சைபர்மீடியா கோ என்ற நிகழ்ச்சியை நடத்தியதில் 2000 செல்போன் வாடிக்கையாளர்களிடம் ஆராய்ச்சி நடத்தியது. இதன்மூலம் 95 சதவீத பெண்கள் 86 சதவீத ஆண்களை ஒப்பிடும்போது 95 சத வத பெண்கள் செல்போன் விளையாட்டுக்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கினர்.

கணக்கெடுக்கப்பட்டவர்களில் எழுபத்தைந்து சதவீதம் பேர் தங்கள் ஸ்மார்ட்போன்களில் இரண்டு மணி நேரம் வரை விளையாடியுள்ளனர், அதில் 78 சதவீதப் பெண்கள், 72 சதவீத ஆண்களைவிட அதிக நேரம் செலவிடுகிறார்கள். அவர்களில் 33 சதவீதம் ஒரு வாரத்திற்குள்ளாகவே பலமுறை செல்போன்களில் விளையாடினர்.

இந்த முடிவுகள் மொபைல் விளையாட்டுக்கள் தொடர்புடைய சில பொதுவான கருத்துக்களை உடைத்துவிட்டன. பெண்கள் கேமிங்கில் சுறுசுறுப்பாக உள்ளனர். ஆயினும், அவர்கள் சில தனித்துவமான கேம்களை விரும்புகிறார்கள் என்று சொல்வது உண்மைதான், பொதுவாக சொல்வதென்றால் செல்போனிலேயே இருக்கும் விளையாடக்கூடிய கேம்களுடன் அவர்கள் ஒட்டிக்கொள்கிறார்கள். விலைகொடுத்து வாங்கும் செயலிகளை தவிர்த்துவிடுகிறார்கள்

"அவர்கள் உயர்வகை விளையாட்டாளர்கள், மற்றும் மிகவும் குறைவாகவே உள்ளனர். கேமிங் டெவலப்பர் சமூகத்தைப் பொறுத்தவரை, இந்த கூட்டுறவு ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பைக் குறிக்கிறது..

பெண்கள் மொபைல் கேமிங்கிற்கு வருவதற்காக காரணமாக இருப்பவர்கள் தங்கள் சகாக்கள் மற்றும் நண்பர்கள் உட்பட மட்டுமன்றி அவர்களின் துணைவர்களும் காரணமாக இருக்கிறார்கள். இதுதவிர சமூக வலைப்பின்னல்களில் வரும் விளம்பரங்கள் கூட காரணம் என்று பெண்கள் கூறினர்.

பெண்களிடம் இதுகுறித்து விசாரித்தபோது அவர்கள் மொபைல் கேம்களில் முக்கிய நன்மைகளில் மனஅழுத்தம் விலகுவதாகத் தெரிவித்தனர். மேலும் உற்சாகத்திற்கு உகந்த மனநிலையைப் பெறமுடிகிறது என்றும் தினசரி வேலை பிரச்சினைகளிலிருந்து திசை திரும்பவும் இது உதவுவதாக கூறினர். மேலும் மற்ற விளையாட்டுக்களைப் போலில்லாமல் மொபைல் போன் விளையாட்டுக்களை எங்கும், எந்த இடத்திலும் விளையாட முடியும் என்பது இதில் உள்ள வசதி என்று அவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு சைபர் மீடியாவைச் சேர்ந்த பிரபுராம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in