

ஹூஸ்டனில் நடைபெற்ற ஹவ்டிமோடி நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் முன்னாள் இந்தியப் பிரதமர் நேருவின் பங்களிப்பை மோடிக்கு நினைவூட்டியது மகிழ்ச்சியளிக்கிறது.
அமெரிக்க சபை மெஜாரிட்டி தலைவர் ஸ்டீனி ஹோவர் ஞாயிறன்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை வரவேற்று பேசும்போது மகாத்மா காந்தியையும் நேருவையும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், ஜெய்ராம் ரமேஷ் தன் ட்விட்டர் பதிவில், “சில ஆண்டுகளுக்கு முன்பாக பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உரை ஒன்றில் நேருவைப் புகழ்ந்து பேசியதை நான் நினைவுகூர்கிறேன். நேருவுக்கு வாஜ்பாயி அளித்த அஞ்சலி ஒரு மாஸ்டர்பீஸ், அந்த நாட்கள் எங்கே சென்றது” என்று தெரிவித்துள்ளார்.