

புதுடெல்லி
பஞ்சாபின் அட்டாரி - வாகா எல்லைப் பகுதியில் தேசிய கொடியிறக்கத்தைக் காண வரும் சுற்றுலா பயணிகளிடம், ‘விஐபி டிக்கெட்’ பெயரில் பண மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக ஆன்லைன் பயண ஏற்பாட்டு நிறுவனம் மீது பஞ்சாப் போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தின் எல்லை யில் உள்ளது வாகா கிராமம். இது இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லையைப் பிரிக்கும் பகுதியா கும். இங்கு தினமும் மாலை 5 மணிக்கு தேசிய கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறும். இந்தியப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும், பாகிஸ்தான் பகுதியில் அந்நாட்டு வீரர்களும் அவரவர் தேசியக் கொடியை வணங்கி மெதுவாக இறக்கி அழ காக மடித்து வைப்பார்கள்.
தேசிய கொடியிறக்க நிகழ்ச் சியை இரு நாட்டு வீரர்களும் கம்பீரமாகவும், உணர்ச்சிப் பொங்க வும் நடத்துவார்கள். இந்நிகழ்ச்சி யைக் காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட ஏராளமானோர் தினமும் வருகின்றனர். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நிகழ்ச்சி யைக் காண இருக்கைகள் ஒதுக்கப்படுகின்றன. தவிர இதற் கென தனி கட்டணம் இல்லை.
இந்நிலையில், கொடியிறக்க நிகழ்ச்சியைக் காண ‘விஐபி டிக் கெட்’ என்ற பெயரில் பண மோசடி நடப்பதை, கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.
அன்றைய தினம் டெல்லியைச் சேர்ந்த பெண் மற்றும் 3 பேர், வாகா எல்லையில் நடக்கும் கொடியிறக்க நிகழ்ச்சியைக் காண வந்துள்ளனர். தங்களிடம் ‘விஐபி டிக்கெட்’ இருப்பதாக பிஎஸ்எப் வீரர்களிடம் கூறியுள்ளனர். ஒரு டிக்கெட்டின் விலை ரூ.1,500 என்றும் தெரிவித்துள்ளனர். அதை கேட்டு பிஎஸ்பி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக பஞ்சாப் போலீ ஸிலும் கிரிமினல் புகார் கொடுத்த னர். மேலும், ‘‘வாகா எல்லையில் நடைபெறும் கொடியிறக்க நிகழ்ச்சியைக் காண கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. எனவே, யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்’’ என்று தனது அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பிஎஸ்எப் அதிகாரிகள் எச்சரிக்கையும் விடுத்தனர்.
இந்நிலையில், சர்வதேச அளவில் பயண ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கும் ‘எக்ஸ்பீடியோ குரூப்’ என்ற ஆன்லைன் நிறுவனத் தின் மீது போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். எல்லைப் பாதுகாப்புப் படையினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீ ஸார் இந்த நடவடிக்கை எடுத் துள்ளனர்.
இதுதொடர்பாக விளக்கம் அறிய ‘எக்ஸ்பீடியா.காம்’ நிறுவனத் துக்கு இ மெயில் அனுப்பியும் எந்த பதிலும் வரவில்லை.
‘விஐபி டிக்கெட்’ பெயரில் பணம் பெற்றுக் கொண்டு மோசடி யில் ஈடுபட்டதாகக் கூறப்படும் எக்ஸ்பீடியோ நிறுவனம் ‘சீப்டிக் கெட்ஸ்.காம்’, ‘டேக்ஸிபஜார்’ போன்ற இணையதளங்களுடனும் தொடர்புள்ளது குறிப்பிடத்தக்கது.