

புதுடெல்லி
தன்னை தாக்கிய கல்லூரி மாணவனுக்கு தான் தீங்கிழைக்க மாட்டேன் என அவரது தாயாரிடம் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ உறுதியளித்துள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள ஜாதவ் பூர் பல்கலைக்கழகத்தில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய வனத்துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரி யோவை இடதுசாரி அமைப்பு களைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கி னர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து கொல்கத்தா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவின் ட்விட்டர் பக்கத்தில், மாணவர்கள் அவரை சூழ்ந்து கொண்டு தாக்கும் காட்சி நேற்று முன்தினம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதற்கு கீழே அவர் ஒரு பதிவிட் டிருந்தார். அதில் ஒரு மாணவனை சுட்டிக்காட்டி, "என் மீது நிகழ்த்தப் பட்ட தாக்குதலுக்கு இவர்தான் காரணம். இப்போது மேற்கு வங்க அரசு அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?'' என சுப்ரியோ கேள்வியெழுப்பியிருந்தார்.
இந்தப் பதிவு வைரலானதை தொடர்ந்து, அந்த மாணவர் கொல்கத்தா சம்ஸ்கிருத கல்லூரி யில் 2-ம் ஆண்டு படித்து வரும் தேபஞ்சன் பல்லவ் சாட்டர்ஜி என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த மாணவரின் தாயார் ரூபாலி பல்லவ் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அதில், தமது மகன் செய்த செயலுக்காக தான் மன்னிப்பு கேட்பதாகவும், அவரை மன்னித்து விட்டுவிடுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், அவருக்கு பதிலளிக்கும் வகையில், மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:
அம்மா, உங்கள் மகனுக்கு நான் எந்த தீங்கையும் செய்ய மாட்டேன். அவர் மீது காவல்துறையிடம் எந்த புகாரையும் நான் கொடுக்கப் போவ தில்லை. தனது செயலில் இருந்து அவர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என் நோக்கம். எனவே, நீங்கள் கவலைப்பட வேண் டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.