7 நாட்களில் வீட்டை காலி செய்யும்படி சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டீஸ்

7 நாட்களில் வீட்டை காலி செய்யும்படி சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டீஸ்
Updated on
1 min read

என். மகேஷ்குமார்

அமராவதி

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏழு நாட் களில் வீட்டை காலி செய்ய வேண் டும் என்று நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

அமராவதி பகுதியில் உண்ட வல்லி எனும் இடத்தில் ரமேஷ் என் பவருக்கு சொந்தமான 1.3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வீட்டை முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வாடகைக்கு எடுத்துள்ளார். கிருஷ்ணா நதிக் கரையோரம் மிகவும் அழகாக கட்டப்பட்ட இந்த சொகுசு வீட்டில் நீச்சல் குளம் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, இந்த வீட்டின் அருகே அரசு செலவில் ‘பிரஜா வேதிகா’ எனும் கட்டிடத்தை கட்டி மக்கள் குறை கேட்கும் மையமா கப் பயன்படுத்தி வந்தார்.

இதனிடையே ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமை யிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு கடந்த மே மாதம் பதவியேற் றது. புதிய அரசு பொறுப்பேற்றதும் சந்திரபாபு நாயுடு வசிக்கும் வீடு தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.

அந்த வீடு சட்டத்துக்குப் புறம் பாக நதிக்கரையில் கட்டப்பட்டுள்ள தாக அரசு தரப்பில் குற்றம் சாட்டப் பட்டது. முதல்கட்டமாக பிரஜா வேதிகா கட்டிடம் அண்மையில் இடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு, குண்டூரில் வேறு வீட்டுக்கு குடி பெயர்ந்தார். பழைய வாடகை வீட்டை அவர் காலி செய்யவில்லை.

இதனிடையே, சட்டத்தை மீறி உரிய அனுமதியின்றி கிருஷ்ணா நதிக் கரையோரம் கட்டப்பட்ட வீட்டை 7 நாட்களுக்குள் இடிக்க வேண்டும். இல்லையெனில் அரசே அந்த வீட்டை இடித்துவிடும். அதில் குடியிருப்போர் 7 நாட்களுக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும் என அரசுத் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 19-ம் தேதி இந்த நோட்டீஸ் வெளியிடப் பட்டது. அதன்படி வரும் 25-ம் தேதிக்குள் சந்திரபாபு நாயுடு வீட்டை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in