

கொல்கத்தா
மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா, மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேற்குவங்க தலைநகர் கொல் கத்தாவில் ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் அகில பாரதிய வித் யார்த்தி சார்பில் நேற்று முன்தினம் கருத்தரங்கம் நடந்தது.
இதில் மேற்குவங்கத்தின் அசன் சோல் தொகுதி எம்.பி.யும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான பாபுல் சுப்ரியோ பங்கேற்கச் சென்றார். அப்போது இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை அமைச்சர் சமா தானம் செய்ய முயன்றார். ஆனால் சில மாணவர்கள், அமைச்சரின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கர் விரைந்து சென்று அமைச்சரை மீட்டார்.
அமைச்சர் கருத்து
அமைச்சர் பாபுல் சுப்ரியோ நேற்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கோழைகள். அவர் களை விரைவில் கண்டுபிடித்து மனநல சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இந்த தாக்குதல் தொடர்பாக மம்தா அரசு என்ன நட வடிக்கை எடுக்கப்போகிறது" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பாபுல் சுப்ரியோ தாக்கப் பட்டதைக் கண்டித்து பாஜக சார்பில் கொல்கத்தாவில் நேற்று பேரணி நடத்தப்பட்டது. பேரணி யால் சில மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பாஜக பொதுச்செயலாளரும் மேற்குவங்க பொறுப்பாளருமான கைலாஷ் விஜய்வர்கியா கூறியதாவது:
மேற்குவங்கத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பல் கலைக்கழக வளாகத்தில் மத்திய அமைச்சர் கொடூரமாக தாக்கப் பட்டுள்ளார். இது மிகவும் துரதிஷ்டவசமானது.
முதல்வர் மம்தா பானர்ஜியால் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட முடியவில்லை. எனவே மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.