டி.கே.சிவகுமார் மீதான வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏவிடம் விசாரணை
இரா.வினோத்
பெங்களூரு / புதுடெல்லி
கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் மீதான சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக் கில் காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி ஹெம்பல்கரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று விசா ரணை நடத்தினர்.
கர்நாடக முன்னாள் அமைச்ச ரும் மூத்த காங்கிரஸ் தலைவரு மான டி.கே.சிவகுமாருக்கு சொந்த மான இடங்களில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட வருமான வரி சோத னையில் ரூ.58 கோடி ரொக்கப் பணம் சிக்கியது. இதுகுறித்து நடத் திய விசாரணையில் சட்ட விரோத பண பரிவர்த்தனை நடந்தது தெரியவந்தது.
இதையடுத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி டி.கே.சிவகுமாரிடம் விசாரணை நடத்தினர். கடந்த 3-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டு, நேற்று முன் தினம் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரது மகள் ஐஸ்வர்யாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். அப்போது ஐஸ்வர்யா நிர்வாகியாக இருக்கும் டி.கே.சிவகுமார் கல்வி நிறுவனம், அறக்கட்டளை ஆகிய வற்றின் பண பரிவர்த்தனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து அமலாக்கத் துறை டி.கே.சிவகுமாரின் ஆதரவா ளரும், பெலகாவி ஊரக தொகுதி யின் காங்கிரஸ் எம்எல்ஏவுமான லட்சுமி ஹெம்பல்கரை விசார ணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். அதன்பேரில் லட்சுமி ஹெம்பல்கர் நேற்று டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில் ஆஜரானார்.
அப்போது அதிகாரிகள் லட்சுமி ஹெம்பல்கரிடம் டி.கே.சிவ குமாருக்கும் அவருக்கும் இடையே நடைபெற்ற பண பரிவர்த்தனை, தொழில் ரீதியான தொடர்பு, பினாமி நிறுவனங்களில் தொடர்பு உள்ளிட்டவை தொடர்பாக கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.
இதனிடையே கர்நாடகாவை சேர்ந்த சிலர், லட்சுமி ஹெம்பல்கர், டி.கே.சிவகுமாருக்கு எதிராக 50-க்கும் மேற்பட்ட புகார்களை அம லாக்கத் துறைக்கு அனுப்பியுள்ள னர். இதனால் சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் சிவ குமாருக்கு நெருக்கடி அதிகரித்துள் ளதாக கூறப்படுகிறது.
