Published : 21 Sep 2019 08:05 AM
Last Updated : 21 Sep 2019 08:05 AM

பொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம்: இடதுசாரி தலைவர்கள் கடும் கண்டனம்

புதுடெல்லி

டெல்லியில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட், அகில இந்திய பார்வர்ட் பிளாக், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி பேசும் போது, “நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமாகி வரு கிறது. பொருளாதார மந்தநிலை மோசமடைய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசே காரணம்.

விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து பேசவோ அவர்களது பிரச் சினையைத் தீர்க்கவோ மத்திய அரசு முன்வருவதில்லை. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி வரு கிறது. பாசிச அடிப்படையிலான இந்த கொள்கையை கடைப்பிடித்து வரும் மத்திய அரசை இடதுசாரிக் கட்சிகள் கண்டிக்கின்றன.

கடந்த சில மாதங்களில் நாட்டின் பணக்கார நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.2.25 லட்சம் கோடியை நிவாரணமாக வழங்கியுள்ளது பிரதமர் மோடி தலைமையிலான அரசு. ஆனால் கடன் தொல்லை யாலும், பயிர் நஷ்டத்தாலும் அவதிப்பட்டு தற்கொலையை நாடி வரும் விவசாயிகளின் நிலையைப் பற்றி கவலைப்படுவதற்கு அந்த அரசு தயாராக இல்லை.

நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஏழை மக்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளனர். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. தொழிற்சாலைகளும், வர்த்தகமும் மிகவும் நொடிந்துள்ளன.

ஏராளமான நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் பணி யும் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பவேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது. குறிப்பாக விவசாயத் துறை மிகவும் பாதிக்கப்பட்டுள் ளது. ஏராளமான விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். இதற்கு மத்திய அரசின் பாசிச போக்கே காரணம்” என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x