கேரளா, மத்தியப் பிரதேசம் இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சிகள் வெற்றி

கேரளா, மத்தியப் பிரதேசம் இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சிகள் வெற்றி
Updated on
1 min read

கேரளா, மத்தியப் பிரதேசம், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஐந்து தொகுதி களுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் அந்தந்த மாநில ஆளும் கட்சிகள் வெற்றி பெற்றன.

கேரளாவில் அருவிக்கரை சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ கார்த்திகேயன் அண்மையில் உயிரிழந்தார். அந்தத் தொகுதியில் கார்த்திகேய னின் மகன் சபரிநாதன் போட்டி யிட்டார்.

கடந்த 27-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில் 56,448 வாக்குகள் பெற்று சபரிநாதன் வெற்றிபெற்றார். மார்க்சிஸ்ட் வேட்பாளர் விஜயகுமாருக்கு 46,320 வாக்கு கள் கிடைத்தன. பாஜக வேட் பாளர் ராஜகோபால் 34,145 வாக்குகளைப் பெற்றார்.

மத்தியப் பிரதேசம் கரோத் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் சந்தர் சிங் சிசோடியா வெற்றி பெற்றார்.

திரிபுரா மாநிலத்தில் பிரதாப்கர், சுர்மா ஆகிய தனி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் ராமு தாஸ், ஆசிஷ் தாஸ் ஆகியோர் அமோக வெற்றி பெற்றனர்.

மேகாலயாவில் சோக்பாட் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் வேட்பாளர் புளூபெல் ஆர். சங்மா வெற்றி பெற்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in