Published : 20 Sep 2019 10:18 AM
Last Updated : 20 Sep 2019 10:18 AM

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி அமைவதில் சிக்கல்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற விருக்கும் மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி அமை வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆதரவுடன் பாஜக ஆட்சி நடை பெற்று வருகிறது. இந்நிலையில், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அதிகபட்சமாக 115 தொகுதிகள் மட்டும் சிவசேனா வுக்கு ஒதுக்க விரும்புவதாக தெரியவந்துள்ளது.

ஆனால், சமபங்கு தொகுதிகள் கேட்பதுடன், இரண்டரை ஆண்டு களுக்கு ஆட்சி செய்யும் உரிமை யையும் சிவசேனா கோருவதாகக் கூறப்படுகிறது. இதில், முதல்வராக கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தனது மகன் ஆதித்யா தாக்கரேவை அமர்த்த விரும்புகிறார். இதனால் இரு கட்சிகளுக்கு இடையே கூட்டணி அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவசேனாவின் மூத்ததலைவர் சஞ்சய் ரவுத் நேற்று கூறும்போது, ‘இரு கட்சிகளுக்கும் சமபங்கு தொகுதிகள் எனும் உறுதியை பாஜக மதிக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளைக் கேட்டது. அது கிடைக்காததால் இரு கட்சிகளும் தனித்து போட்டி யிட்டன. இதில், 122 தொகுதிகள் கிடைத்தும் ஆட்சி அமைப்பதில் பாஜகவுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால், குறைந்த தொகுதிகள் பெற்ற சிவசேனாவின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

இந்த சூழலில், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஏற்படுவதில் சிக்கல் எழுந்திருக் கிறது. இதற்கு காங்கிரஸ் மற்றும் சரத்பவாரின் தேசியவாதக் காங் கிரஸ் தலைவர்களில் பலரும் பாஜக வில் இணைந்து விட்டதும் ஒரு முக்கியக் காரணமாகி உள்ளது. இதனால், அதிக பலம் பெற்றுவிட்ட தாக பாஜக கருதுகிறது.

இதனால், 288 பேர்கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 188 தொகுதிகளில் வெல்ல பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. ஒரு வேளை, குறைந்த தொகுதிகள் பெற்றால், சிவசேனா மீண்டும் தனக்கு ஆதரவளிப்பதை விட அக்கட்சிக்கு வேறு வழியில்லை என்பது பாஜகவின் மனக்கணக்காக உள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்த லில் தனித்து போட்டியிட்ட சரத் பவார், இந்தமுறை காங்கிரஸுடன் இணைந்துள்ளார். இரு கட்சிகளும் தலா 125 என சுமூகமாக சமபங்கு தொகுதிகளை பிரித்துக் கொண் டன. ஆனால், இக்கூட்டணியில் சேர விரும்பிய ராஜ் தாக்கரேயின் நவ்நிர்மாண் சேனாவை ஏற்க காங்கிரஸ் மறுத்து விட்டது.

இதனால், எதிர்க்கட்சிகளின் வாக்குகளை சிறிய கட்சிகள் சில தொகுதிகளில் பிரிக்கும் சூழல் தெரிகிறது. இந்தப் பட்டியலில் அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாதி, ஹைதராபாத் எம்.பி.யான அசாசுத்தீன் உவைஸியின் அகில இந்திய மஜ்லீஸ்-எ-இத்தஹாதுல் முஸ்லிமீன் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x