

புதுடெல்லி
இ-சிகரெட் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு நேற்று பிறப்பித்தது. இதை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.
சிகரெட்டுக்கு மாற்றாக இ-சிகரெட் பயன்பாட்டில் இருந்து வந்தது. இதுவும் உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் என ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, இ-சிகரெட் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, விநியோகம், விற் பனை, சேமித்து வைத்தல், விளம்பரம் செய்தல் என அனைத்து செயல்களுக்கும் தடை விதிக்க மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது.
இந்த விவகாரம் தொடர்பான அமைச்சர்கள் குழுவின் தலை வரும் மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் இந்தத் தகவலை தெரிவித்தார். இது தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வரப்படும் என்றும் பின்னர் குளிர் கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மசோதா நிறைவேற்றப் படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.
இந்நிலையில், இ-சிகரெட்டுக்கு தடை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு நேற்று பிறப்பித்தது.
இதன்படி, உற்பத்தி, விற்பனை உட்பட இ-சிகரெட் தொடர்பான அனைத்து செயல்களும் குற்ற மாகக் கருதப்படும். முதல் முறை யாக சட்டத்தை மீறுவோருக்கு ஓராண்டு சிறை அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக் கப்படும். தொடர்ந்து சட்டத்தை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
இதுபோல, இ-சிகரெட்டை சேமித்து வைப்பதும் குற்றமாகக் கருதப்படும். அவர்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை அல்லது ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்க இந்த சட்டம் வகை செய்கிறது.
இ-சிகரெட் இருப்பு வைத் திருப்பதாக புகார் எழுந்தால், சந்தேகப்படும் இடங்களில் சோதனை நடத்த, அதற்கென அங் கீகரிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இ-சிகரெட் தொடர்பான சொத்து கள், ஆவணங்களை முடக்கவும் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அவசர சட்டம் மூலம் இ-சிகரெட்டை திடீரென தடை செய்திருக்கும் மத்திய அரசின் செயலுக்கு பயன்பாட்டாளர் கள் மற்றும் இத் தொழிலில் ஈடு பட்டுள்ளவர்கள் கண்டனம் தெரி வித்துள்ளனர். - பிடிஐ