அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சிவகுமார் திஹார் சிறையில் அடைப்பு

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சிவகுமார் திஹார் சிறையில் அடைப்பு
Updated on
1 min read

புதுடெல்லி

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் நேற்று டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கர்நாடக முன்னாள் அமைச் சரும், காங்கிரஸ் மூத்த தலை வருமான டி.கே.சிவகுமார், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக் கில் கடந்த 3-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரம் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள ஆர்எம்எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 17-ம் தேதி டெல்லி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்தது. மேலும் அவரது நீதிமன்ற காவலை அக்டோபர் 1-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த டி.கே.சிவகுமாரின் உடல்நிலை தேறியதால் நேற்று மாலை அவர் திஹார் சிறையில் அடைக்கப் பட்டார். அங்கு பொருளாதார குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட வர்கள் அடைக்கப்படும் 7-வது அறையில் அடைக்கப்பட்டார். இதே வளாகத்தில் 15-வது அறை யில் முன்னாள் மத்திய அமைச் சர் ப.சிதம்பரமும் அடைக்கப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in