Published : 19 Sep 2019 04:45 PM
Last Updated : 19 Sep 2019 04:45 PM

‘உ.பி.யின் கர்மயோகி’- யோகி ஆதித்யநாத்தின் 30 மாத கால பாஜக ஆட்சி சாதனைகள் வீடியோ வெளியீடு 

லக்னோ, பிடிஐ

30 மாத கால பாஜக ஆட்சியில் உத்தரப் பிரதேச மாநிலத்தி ‘அடையாளத்தை மீட்டதாக’ அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதமடைந்துள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

14 ஆண்டுகாலத்திற்குப் பிறகு மார்ச் 19, 2017-ல் பாஜக ஆட்சி அமைத்தது. இந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் உத்தரப் பிரதேச மாநிலம் பற்றிய பார்வையையும் அடையளத்தையும் மாற்றியுள்ளோம்.

உத்தரப் பிரதேசத்தின் அடையாளத்தை மீட்டிருப்பது மிகப்பெரிய சாதனையாகும். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை முன்னேறியுள்ளது, கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஒரு கலவரம் கூட நடைபெறவில்லை.

முகமூடிக் கொள்ளை வழக்குகள் 54% குறைந்துலன, பாலியல் பலாத்கார சம்பவங்கள் 36% குறைக்கப்பட்டுள்ளன, கொலை வழக்குகள் 15% குறைந்துள்ளன, கொள்ளைச் சம்பவங்கள் 45% குறைந்துள்ளன, கடத்தல் 30% குறைந்துள்ளது, கும்பல் தகராறுகள் 38% குறைந்துள்ளன.

பயங்கரக் கிரிமினல் குற்றவாளிகள் ஒன்று மாநிலத்திலிருந்து சென்று விட்டனர், அல்லது சிறையில் இருக்கின்றனர். சுமார் 41 புதிய காவல்நிலையங்கள் மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ளன” என்றார்.

சுமார் ஒருமணி நேரம் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தன் அரசின் சாதனைகள் அடங்கிய சிறு பிரசுரத்தையும் வெளியிட்டுள்ளார். கும்பமேளா மற்றும் பிரவசி பாரதிய திவாஸ் ஆகியவற்றை சிறப்புற நடத்தியதை தன் அரசின் சாதனைகளாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ‘உ.பி.யின் கர்மயோகி’ என்ற தலைப்பில் சிறு திரையிடல் நிகழ்வும் நடந்தது. இந்த வீடியோவில் “சந்நியாசின் பணியினால் உ.பி. பிரகாசிக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

விவசாயிகள் நிலைப் பற்றி யோகி ஆதித்யநாத் குறிப்பிடுகயில், “விவசாயிகளுக்காக நிறைய திட்டங்களை வகுத்துள்ளோம், 86 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ரூ.1 லட்சம் வரை வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து முக்கிய திருவிழாக்களும் அமைதியான முறையில் நடைபெற்றன, லோக்சபா தேர்தல் அமைதியாக நடந்தன. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் உ.பி.யில் தேர்தல் கால வன்முறைச் சம்பவங்கள் குறைவு.

மேலும் எதிர்காலத்தில் உ.பியை 1 ட்ரில்லியன் பொருளாதாரமாக மாற்றுவதற்கான பணித்திட்டங்களை மாநில அரசு வகுத்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் அரசு ஆரம்பப் பள்ளிகளில் சுமார் 50 லட்சம் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

என்செபலைட்டிஸ் மரணங்கள் பெருமளவில் குறைந்துள்ளதும் ஆட்சியின் சாதனை” என்றார் யோகி ஆதித்யநாத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x