Published : 19 Sep 2019 12:37 PM
Last Updated : 19 Sep 2019 12:37 PM

ரூ.5 கோடி இடம் அபகரிப்பு: பதிவாளர் உட்பட 18 பேர் தலைமறைவு

மதுரை

மதுரையில் போலி ஆவணம் மூலம் ரூ.5 கோடி மதிப்புள்ள இடத்தை அபகரித்ததாக திமுக மாநில நிர்வாகி உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை மாடக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. இவருக்குச் சொந்தமான 98 சென்ட் இடம் புறவழிச்சாலை துரைசாமி நகரில் உள்ளது. சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள இந்த இடத்தை அதலை கிராமத்தைச் சேர்ந்த செந்தில், திமுக மாணவரணி மாநில துணைச் செயலாளராக உள்ளார். அவரது மனைவி செந் தில்குமாரி உள்ளிட்டோர் ஆள் மாறாட்டம் செய்தும், போலி ஆவ ணங்கள் மூலமும் அபக ரித்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக பாக்கி யலட்சுமி மதுரை நகர் மத்திய குற்றப்பிரிவில் புகார் செய்தார். விசாரணையில், செந்தில், செந் தில் குமாரி உட்பட 24 பேர் ஆதார் அட்டை உட்பட போலி ஆவணங்களைத் தயாரித்து பாக்கியலட்சுமியின் 98 சென்ட் இடத்தை அபகரித்தது தெரிய வந்தது.

இதையடுத்து செந்தில், அவ ரது மனைவி செந்தில்குமாரி, சார்- பதிவாளர் உட்பட 24 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் செந்தில், உறவினர்கள் பழனிக்குமார், கிருஷ்ணமூர்த்தி, நாகராஜ், பாலகுரு, பாலச்சந்திரன் ஆகிய 6 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். தலை மறை வான மற்றவர்களை தேடிவ ருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x