Published : 19 Sep 2019 11:10 AM
Last Updated : 19 Sep 2019 11:10 AM

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஹரியாணா ஆகிய 3 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு; இன்று வெளியாக வாய்ப்பு: மும்பையில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை

புதுடெல்லி

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஹரி யாணா ஆகிய 3 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதுதொடர்பாக தேர் தல் ஆணையர்கள் மும்பையில் நேற்று ஆலோசனை நடத்தினர்.

மகாராஷ்டிர சட்டப்பேரவை யின் பதவிக்காலம் நவம்பர் 9-ம் தேதியுடனும், ஹரியாணா சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 2-ம் தேதியுடனும், ஜார்க்கண்ட் சட்டப்பேரவையின் பதவிக்காலம் டிசம்பரிலும் முடிவடையவுள்ளது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலத் தலைமைச் செயலர் கள், தேர்தல் அதிகாரிகள் தலைமைத் தேர்தல் ஆணை யத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதைத் தொடர்ந்து 3 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியுள்ளது. இதற்கான தேர்தல் தேதிகள் தொடர்பான அறிவிப்பை இன்று தேர்தல் ஆணையம் வெளியிடும் எனத் தெரிகிறது. இந்த 3 மாநிலங்களிலுமே பாஜகதான் ஆட்சியில் உள்ளது.

மகாராஷ்டிரா, ஹரியாணா மாநிலங்களுக்கு முதலிலும் அதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்துக்கும் தேர்தல் நடத்தப் படும் எனத் தெரிகிறது. ஜார்க் கண்ட் மாநிலத்தில் நக்சல் பிரச்சினை இருப்பதால் அங்கு பல கட்டங்களாகத் தேர்தல் நடத்தப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மும்பைக்கு நேற்று முன்தினம் வந்தார். அவருடன் தேர்தல் ஆணை யர்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா ஆகியோரும் வந்திருந் தனர். மகாராஷ்டிரா மாநில தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரி களுடன் சுனில் அரோரா உள்ளிட் டோர் ஆலோசனை நடத்தியுள்ள னர். இந்த ஆலோசனைக் கூட்டம் நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று கூறும் போது, “3 மாநில பேரவைத் தேர்தல் தேதிகள் டெல்லியில் விரைவில் அறிவிக்கப்படும். வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க வசதியாக பூத் ஸ்லிப்கள் முன்னதாகவே வழங்கப்படும்.

சில அரசியல் கட்சிகள், தேர்தல் செலவு வரம்பை அதிகரிக்க வேண்டும் என்றும், சில கட்சிகள் அதைக் குறைக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன” என்றார்.

மகாராஷ்டிராவில் பாஜக வைச் சேர்ந்த தேவேந்திர பட்னா விஸும், ஹரியாணாவில் மனோகர் லால் கட்டாரும், ஜார்க்கண்டில் ரகுவர்தாஸும் முதல்வர்களாக உள் ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x