Published : 19 Sep 2019 10:44 AM
Last Updated : 19 Sep 2019 10:44 AM

ஊருக்குள் நுழைய‌ தலித் எம்.பி.க்கு அனுமதி மறுப்பு: கர்நாடக முதல்வர் எடியூரப்பா கண்டனம்

இரா.வினோத்

பெங்களூரு

கர்நாடகாவில் சாதி காரணமாக, தலித் எம்.பி. ஒருவர் ஊருக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக முன்னாள் சமூக நலத் துறை அமைச்சரான நாராயணசாமி, கடந்த மக்களவைத் தேர்தலில் சித்ரதுர்கா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் சித்ரதுர்கா தொகுதிக்குட் பட்ட பவாகடா அருகேயுள்ள கொல் லாரஹட்டி கிராமத்துக்கு பயோ கான் மருந்து நிறுவன அதிகாரிகள் மற்றும் நாராயண ஹிருதாலயா மருத்துவமனை மருத்துவர்களுடன் நாராயணசாமி சென்றார்.

அப்போது கொல்லாரஹட்டி கிராமத்தில் வசிக்கும் ஆதிக்க சாதியினர், நாராயணசாமி எம்.பி.யுடன் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதற்கு போலீஸார் எச்சரிக்கை விடுத்தபோது, அங்கு குழுமிய ஆதிக்க சாதியினர், தலித் வகுப் பைச் சேர்ந்த நாராயணசாமியை எங்கள் ஊருக்குள் அனுமதிக்க முடியாது. தலித் வகுப்பினரை நாங்கள் எப்போதும் ஊருக்குள் அனுமதித்தது இல்லை. இதற்கு முன்பு கூட தலித் வகுப்பைச் சேர்ந்த எம்.பி., எம்எல்ஏக்கள், அதிகாரி களை தடுத்து நிறுத்தி இருக்கிறோம். எனவே, இவரையும் ஊருக்குள் நுழைய விட முடியாது என திட்ட வட்டமாக தெரிவித்துள்ளனர்.

இதனால் நாராயணசாமியின் ஆதரவாளர்களுக்கும், ஆதிக்க சாதியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இத னால் ஏமாற்றம் அடைந்த நாராயணசாமி, அங்கிருந்து வேதனையுடன் திரும்பினார்.

இதுகுறித்து முதல்வர் எடி யூரப்பா கூறுகையில், “தொகுதி யின் வளர்ச்சி பணிக்காக சென்ற ஒரு எம்.பி.யை சாதியின் காரணமாக ஊருக்குள் நுழைய விடாமல் தடுத் தது வன்மையாக கண்டிக்கத்தக் கது. இந்த சம்பவம் கர்நாடகாவுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள் ளது. இதுகுறித்து விரிவான விசா ரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு துமக்கூரு மாவ‌ட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார்.

இதுகுறித்து நாராயணசாமி எம்.பி. கூறுகையில், “எனது 20 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை யில் இவ்வளவு மோசமான சூழலை எதிர்கொண்டது இல்லை. 21-ம் நூற்றாண்டிலும் இந்த நிலை நீடிப்பது இந்தியாவுக்கே வெட்கக் கேடு. ஒரு எம்.பி.க்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களின் நிலையை எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

அந்த கிராமத்து மக்களை காவல் துறையின் மூலம் அடக்கி, அந்த ஊருக்குள் என்னால் நுழைந்திருக்க முடியும். ஆனால், அதனை நான் விரும்பவில்லை. இந்த சம்பவத் தால் மிகுந்த வருத்தத்துக்கு ஆளாகி யுள்ளேன். இந்திய அரசியலமைப்பு சட்டம் சாதிக் கொடுமை, தீண்டா மையை போக்கியுள்ளது. ஆனால், மக்கள் மனதில் சாதி இன்னும் எவ்வளவு கொடூரமாக இருக்கிறது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.

மக்களின் மனதில் இருக்கும் சாதி வேற்றுமையை களைய வேண்டும். சாதியின் பெயரால் சமூக விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் அனைவரும் சமம் என்ற மனநிலையை வளர்க்க வேண்டும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x