

புதுடெல்லி
பாஜக மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புக்கு எதிராக அண்மை யில் கூறிய கருத்துக்காக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்குக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப் பட்டுள்ளது.
இது தொடர்பான மனு டெல்லி பெருநகர கூடுதல் முதன்மை நீதிபதி சமர் விஷால் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப் போது அவர், இந்த மனுவை அக்டோபர் 9-ம் தேதி பரிசீல னைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.
அவதூறு வழக்கை பாஜகவை சேர்ந்த ராஜேஷ் குமார் என்ற வழக்கறிஞர் தொடர்ந்தார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, “பாஜக மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிராக மட்டுமின்றி பொது மக்களுக்கு எதிராகவும் அவ தூறான கருத்துகளை கூறி திக்விஜய் சிங் கடும் குற்றம் புரிந்துள்ளார்” என்றார்.
- பிடிஐ