ஹரியாணா தேர்தலில் பாஜக தனித்து போட்டி

ஹரியாணா தேர்தலில் பாஜக தனித்து போட்டி
Updated on
2 min read

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி 

ஹரியாணா மாநிலத்துக்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இங்கு ஆளும் பாஜக மீண்டும் தனித்து போட்டியிட உள்ளது.

ஹரியாணாவின் சட்டப்பேர வைக்கு மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. இதன் வரலாற்றில் முதல் கட்சியாக பாஜக 2014 தேர்த லில் எந்தக் கூட்டணியும் இன்றி போட்டியிட்டு தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தது. 47 எம்எல்ஏக்களை பெற்ற பாஜகவின் வெற்றிக்கு அப்போது வீசிய பிரதமர் நரேந்திர மோடி அலை காரணமாக அமைந்தது. இதில், முதன்முறை எம்எல்ஏவான மனோகர் லால் கட்டாரை முதல்வராக பாஜக தேர்வு செய்தது.

இந்தமுறை தேர்தலில் பிரதமர் மோடிக்கு மக்களவையில் கிடைத்த வெற்றியுடன், ஹரியாணாவில் தனது ஐந்து வருட ஆட்சியையும் பாஜக நம்பியுள்ளது. கடந்த மக்க ளவைத் தேர்தலில் ஹரியாணா வின் 10 மக்களவைத் தொகுதி களிலும் பாஜகவுக்கே வெற்றி கிடைத்திருந்தது. இதனால், 75 சட்டப்பேரவை தொகுதிகள் பாஜகவால் குறிவைக்கப்பட் டுள்ளன.

இதுபோல், பாஜக, ஹரியாணா வில் கூட்டணி இன்றி தனித்து போட்டியிடுவது புதிதல்ல. கடந்த 1991-ல் முதன்முறையாக தனித்து போட்டியிட்டதில் இரண்டு எம்எல்ஏக்கள் மட்டுமே கிடைத்தன. இதே எண்ணிக்கை எம்எல்ஏக்கள் 2005-ல் மீண்டும் தனித்துப் போட்டி யிட்டபோது கிடைத்தனர். 2009 தேர்தலின்போது இந்த எண் ணிக்கை மேலும் கூடியது. 2 எம்எல்ஏக்களுடன் கூடி மொத்தம் 4 ஆக உயர்ந்தது.

அதேநேரத்தில் 2014 தேர்தலின் போது எதிர்பாராத வகையில் 47 எம்எல்ஏக்களுடன் ஆட்சியில் அமர்ந்த பாஜகவுக்கு 32 சதவீத வாக்குகள் கிடைத்தன. இதற்கு முந்தைய தேர்தல்களில் பாஜக அதிகபட்சம் பெற்ற வாக்குகள் சதவிகிதம் 10.36 மட்டுமே.

எனவே, இங்கு ஐந்தாவது முறையாக பாஜக தனித்தே போட்டி யிட முடிவு செய்து களம் இறங்கி யுள்ளது.

பாஜக சார்பில் போட்டியிட மற்ற எந்தக் கட்சியிலும் இல்லாத வகையில் ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் மூன்று வகையான தேர்வுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் தயாராக உள்ளது. முதல்வரான மனோகர் லால் கட்டார், பாஜகவின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் தேசியத் தலைவர் அமித் ஷா, இவர்கள் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) தலைவர்கள் ஆகிய 3 வகையில் தேர்வு நடைபெறும்.

கடந்த நவம்பர் 1, 1966-ல் ஹரியாணா புதிய மாநிலமாக பஞ்சாபில் இருந்து பிரிக்கப்பட்டது. அப்போது முதல் 13 சட்டப்பேரவை தேர்தல்கள் அங்கு நடைபெற்று முடிந்துள்ளன. தற்போது வரவிருக் கும் 14 வது சட்டப்பேரவை தேர்த லில் ஹரியாணாவின் மற்ற அனைத்து கட்சிகளும் பாஜகவை எதிர்க்கின்றன. பாஜகவின் முதல்வர் வேட்பாளராக மனோகர் லால் கட்டார் முன்னிறுத்தப்பட உள்ளார்.

இதனால், முதன்முறையாக பாஜக தனது ஆட்சிப்பணிகளையும் முன்னிறுத்தி வாக்குகள் கோர உள்ளது. இதன் காரணமாக, ஹரியாணாவின் தனிப்பெரும் கட்சியாக பாஜக அங்கு உருவெடுத் துள்ளது. பாஜகவை எதிர்க்கும் கட்சிகளின் பட்டியலில் காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம், ஜனநாயக் ஜனதா, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி ஆகியவை இடம் பெற்றுள்ளன. எனினும், அவர்களுக்குள் இன்னும் கூட்டணி உருவாகவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in