

ராமேசுவரம்
இலங்கை அதிபராக மைத்ரிபால சிறிசேனா பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 16-ந் தேதி நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியா நேற்று அறிவித்தார். இந்த தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோட்டாபய ராஜபக்சவும், மக்கள் விடுதலை முன்னணியின் அதிபர் வேட்பாளராக அநுர குமார திசநாயக்கவும், இலங்கை சோசலிச கட்சி சார்பில் அஜந்தா பெரேராவும் இதுவரை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.