Published : 18 Sep 2019 12:33 PM
Last Updated : 18 Sep 2019 12:33 PM

10 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக தேசத்தை மாற்றுவதுதான் இலக்கு: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

புதுடெல்லி

நாட்டை 10 லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக 2030ம் ஆண்டுக்குள் மாற்றுவதுதான் இலக்கு, அதற்கு பாதுகாப்புத்துறை முக்கியப் பங்காற்றும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்

இந்திய பாதுகாப்புத்துறை தளவாடங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுப் பேசியதாவது:

பல்வேறு காரணங்களால் இந்திய பாதுகாப்புத்துறையில் உள்ள தொழில்கள் முழுமையான அளவுக்கு சிறப்பாக பணியாற்ற முடியவில்லை. இதன்காரணாகவே நாம் வெளிநாடுகளில் இருந்து நாம் ஆயுதங்களை கொள்முதல் செய்து வருகிறோம்.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ், இந்த நிலையை மாற்ற பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. இந்தியாவை மிகபப்பெரிய ஆயுத உற்பத்தி செய்யும் நாடாக மட்டுமல்லாமல், ஏற்றுமதியாளராகவும் மாற்ற வேண்டும். இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் முக்கியமாக பங்காற்றக்கூடியது பாதுகாப்புத்துறை.

தற்போது இந்தியாவின் பொருளாதாரம் 2.7 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களாக இருந்து வருகிறது. இதை 2024-ம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்றப்படும், 2030-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்றுவோம்.தேசத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு துறைகள் பங்காற்றி வருகின்றன, இதில் பாதுகாப்புத்துறை மிகவும் முக்கியமானது.

இந்திய பாதுகாப்புத்துறையில் 9 மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்கள், 41 ராணுவ தொழிற்சாலைகள், 50 ராணுவ ஆய்வு மற்றும்மேம்பாட்டு மையங்கள் உள்ளிட்டவை இருக்கின்றன. மேலும், அங்கீகாரம் பெற்று 70 தனியார் நிறுவனங்கள் தளவாடங்கள் உற்பத்தி செய்கின்றன. 1.70 லட்சம் பேர் இதில் பணியாற்றி வருகின்றனர்.

பாதுகாப்புத் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தொழில்துறைக்கு அங்கீகாரம் வழங்குவதை எளிமைப்படுத்துதல், அன்னிய முதலீட்டு வரம்பை அதிகரித்தல், பாதுகாப்பு கொள்கையை ஒழங்கமைத்தல் போன்றவை செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x