Published : 18 Sep 2019 11:39 AM
Last Updated : 18 Sep 2019 11:39 AM

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி: வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திட்டவட்டம்

புதுடெல்லி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஒருநாள் இந்தியாவின் கட்டுப்பாட் டின் கீழ் வரும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது அரசு 100 நாட்களை கடந்துள்ள நிலையில் எஸ்.ஜெய் சங்கர் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பொறுத்தவரை நமது நிலைப்பாடு தெளிவானது. பாகிஸ் தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகும். ஒருநாள் அப்பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என எதிர்பார்க்கிறோம். அண்டை நாடு களுடன் சிறந்த மற்றும் வலுவான உறவை கட்டமைக்க வேண்டும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

ஆனால் ஓர் அண்டை நாட்டிடம் இருந்து நமக்கு தனித்துவமான சவால் வருகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்சினைக்கு வெற்றிகரமாக தீர்வு காணப்படும் வரையிலும் அந்த அண்டை நாடு இயல்பான அண்டை நாடாக மாறும் வரை யிலும் அந்த சவால் நீடிக்கும்.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, இந்தியா பாகிஸ்தான் இடையி லான பிரச்சினை ஆகாது. ஆனால் இந்தப் பிராந்தியத்தில் பாகிஸ் தான் தூண்டிவிடும் பயங்கர வாதமே இரு நாடுகள் இடையி லான பிரச்சினை ஆகும். இதனை நாம் உலகம் உணரச் செய்ய வேண்டும். அண்டை நாட்டுக்கு எதிராக பயங்கர வாத செயல்களை வெளிப்படையாக தூண்டிவரும் நாட்டை உலகில் நாம் எங்கும் காண முடியாது.

கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டுள்ள விவ காரத்தை பொறுத்தவரை அவர் ஒரு அப்பாவி. அவரை தாயகம் கொண்டுவருவதற்கான ஒரு தீர்வை நாம் காண வேண்டும்.

அவரது நலனை உறுதி செய்ய அவரை சந்தித்து பேசுவது நமது நோக்கமாகும். சர்வதேச நீதிமன்ற உத்தரவின்படி தீர்வுக்கான வழியை இது ஏற்படுத்தும்.அவர் நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்கே நாம் முன்னுரிமை அளித்து வருகிறோம். அவருக்கு எதிரான விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறோம்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத் தில் கடந்த 70 ஆண்டுகளில் சிறு பான்மையினர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சிந்து மாகாணத்தில் தற்போது நிகழ்ந்து வருவது, கடந்த 100 நாட்களில் மட்டுமே நடந்த ஒரு சம்பவம் அல்ல. சிறுபான்மையினர் விஷ யத்தில் பிற நாடுகள் மீது குற்றம் சாட்டும் ஒரு நாடு தங்கள் நாட்டில் சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.

இவ்வாறு எஸ்.ஜெய்சங்கர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x