Published : 18 Sep 2019 10:34 AM
Last Updated : 18 Sep 2019 10:34 AM

விமான விபத்துக்குப் பின்னர் நேதாஜிக்கு என்னவாயிற்று என்ற உண்மை நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும்: மம்தா பானர்ஜி ட்வீட்

கொல்கத்தா

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மரணம் குறித்த உண்மை நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும் என்று மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "2015-ம் ஆண்டு இதே நாளில் (செப்.18) மேற்குவங்க அரசு நேதாஜி தொடர்பாக கொல்கத்தா போலீஸார் வசமிருந்த 64 கோப்புகள் மீதான தடையை நீக்கியது. அதை மக்கள் பார்வைக்கு வைக்கும் வகையில் தடை நீக்கப்பட்டது.

தாய்வான் நாட்டின் தாய்ஹொக்கு பகுதியில் நடந்த விமான விபத்துக்குப் பின்னர் நேதாஜிக்கு என்ன ஆயிற்று? இந்த உண்மையைத் தெரிந்து கொள்ள மக்கள் தகுதியானவர்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மரணத்துக்குப் பின்னணியில் பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. ஆகஸ்ட் 18, 1945-ல் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறந்துவிட்டதாகக் கூறப்பட்டாலும் அவர் அந்த விமானத்தில் பயணிக்கவேயில்லை அதற்கு முன்னரே தப்பித்து சோவியத் யூனியன் சென்றுவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி இன்று (புதன்கிழமை) சந்திக்கவுள்ள நிலையில், நேதாஜி மரணம் குறித்து மக்கள் தெரிந்து கொள்வது அவசியம் என அவர் ட்வீட் செய்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

-ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x