Published : 18 Sep 2019 07:37 AM
Last Updated : 18 Sep 2019 07:37 AM

இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் படேல் காட்டிய வழியில் சிறப்பு அந்தஸ்து ரத்து; புதிய பாதையில் காஷ்மீர் பயணம் தொடரும்: பிரதமர் நரேந்திர மோடி கருத்து - 69-வது பிறந்த நாளில் தாயிடம் ஆசி பெற்றார்

காந்திநகர்

இரும்பு மனிதர் சர்தார் வல்லப பாய் படேல் காட்டிய வழியில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. புதிய பாதையில் காஷ்மீர் பயணம் தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடி நேற்று தனது 69-வது பிறந்த நாளை சொந்த மாநிலமான குஜராத்தில் கொண்டாடினார். முழு கொள்ளளவை எட்டியுள்ள சர்தார் சரோவர் அணையை நேற்று காலையில் பார்வையிட்டார். அங்கு நடைபெற்ற 'நமாமி தேவி நர்மதா மகோத்சவ்' நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். நர்மதை நதிக்கு ஆராதனை செய்தார். பின்னர் அங்குள்ள சர்தார் வல்லபபாய் படேல் உருவச் சிலையை பார்வையிட்டார்.

நர்மதை மாவட்டம், கேவடியாவில் உள்ள சுற்றுலா பூங்காவில் பேட்டரி காரில் பயணம் செய்து விலங்குகளை கண்டு ரசித்தார். சர்தார் சரோவர் அணை பகுதியில் உள்ள பட்டாம்பூச்சி பூங்காவில் பல வண்ண பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டு மகிழ்ந்தார். கரு டேஸ்வர்தத் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

பின்னர் கேவடியாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

இரும்பு மனிதர் சர்தார் வல்லப பாய் படேலின் வழிகாட்டுதலால் தான் காஷ்மீர் தொடர்பான முக்கிய முடிவை எடுக்க முடிந்தது. அவர் காட்டிய வழியில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதன்மூலம் புதிய பாதையில் புதிய பயணத்தை காஷ்மீர் தொடங்கி யுள்ளது. சர்தார் வல்லபபாய் படே லின் உறுதியான நடவடிக்கை யால்தான் இந்தியாவுடன் ஹைதராபாத் பகுதி இணைந் தது. இந்தியாவை அவர் ஒன்றுபடுத்தினார்.

சொட்டு நீர் பாசனம்

சர்தார் சரோவர் அணை முழு கொள்ளளவை எட்டி யிருப்பது மகிழ்ச்சியளிக் கிறது. சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. இது இந்திய மண்ணின் கலாச் சாரம். குஜராத்தில் கடந்த 2001-ம் ஆண்டில் சொட்டுநீர் பாசனத்தின் கீழ் 14,000 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெற்றது. தற்போது 19 லட்சம் ஹெக்டேர் நிலம் சொட்டு நீர் பாசனத்தில் பயன் பெறுகிறது.

சொட்டுநீர் பாசனத்தின் மூலம் 50 சதவீத நீரை சேமிக்க முடியும். உரங்களின் அளவில் 25 சதவீதத்தைக் குறைக்க முடியும். விவசாய கூலி செலவில் 40 சத வீதத்தை மிச்சப்படுத்த முடியும். இவை மட்டுமன்றி மின்சாரத்தையும் சேமிக்க முடியும். ‘ஒரு துளி பல கோதுமை மணி' என்ற திட்டத்தை முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான குஜராத் அரசு திறம்பட செயல்படுத்தி வருகிறது.

நீர்வழிப் போக்குவரத்து

குஜராத்தில் கடந்த 2001-ம் ஆண்டில் 26 சதவீத வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய் யப்பட்டது. தற்போது 78 சதவீத வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக் கப்படுகிறது. சர்தார் சரோவர் அணையைக் கட்ட உழைத்த அனை வருக்கும் பாராட்டுகளை தெரி வித்துக் கொள்கிறேன். ஒட்டு மொத்த நாட்டுக்கும் குஜராத் முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

நீர்வழிப் போக்குவரத்துக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன்படி பெரிய நதிகளில் நீர்வழிப் போக்கு வரத்தை தொடங்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் 2022-ம் ஆண் டுக்குள் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் என்று வாக் குறுதி அளித்துள்ளோம். இதை நிறைவேற்ற மத்திய அரசு பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு அதிவேகமாக செயல்படு கிறது. மிகப்பெரிய லட்சிய திட்டங் களை மிகவிரைவாக செயல் படுத்துகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் குஜராத் தலைநகர் காந்தி நகரில் இளைய மகன் பங்கஜ் மோடியின் வீட்டில் வசிக்கிறார். ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் பிரதமர் மோடி தாயாரை சந்தித்து ஆசி பெறுவது வழக்கம்.

இதன்படி அவர் நேற்று மதியம் காந்தி நகரில் வசிக்கும் தனது தாயார் ஹீராபென்னை சந்தித்தார். அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். பின்னர் தாயுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். அப் போது ஹீராபென் தனது மகனுக்கு 501 ரூபாயை பரிசாக வழங்கினார்.

தலைவர்கள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி பாஜக தலைவர்கள், தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்கள், திரை யுலக நட்சத்திரங்கள், பிரபல விளையாட்டு வீரர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்து களைத் தெரிவித்தனர்.

"பிரதமர் மோடி பல்லாண்டு வாழ வேண்டும்" என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ட்விட்டர் மூலமாக வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "பிரதமர் மோடியின் தலைமையில் புதிய இந்தியா உருவாகிறது" என்று புகழாரம் சூட்டினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறும் போது, "இந்தியாவை புதிய உச்சத் துக்கு கொண்டு செல்ல வாழ்த்து கள்" என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் பிறந்தநாளை பாஜகவினர் சேவை வாரமாக கொண்டாடி வருகின்றனர். இதை யொட்டி நாடு முழுவதும் நேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை பாஜக தலைவர்கள் வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x