Published : 17 Sep 2019 07:09 PM
Last Updated : 17 Sep 2019 07:09 PM

கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு நீதிமன்றக் காவல்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

நிதிமுறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட கர்நாடகா காங்கிரஸைச் சேர்ந்த டி.கே.சிவக்குமாரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார் இந்த உத்தரவைப் பிறப்பித்ததோடு, சிவக்குமாரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவரை அனுமதிக்க வேண்டுமா என்று மருத்துவர்களிடம் ஆலோசிக்குமாறு அமலாக்கப் பிரிவுக்கு உத்தரவிட்டது.

கோர்ட்டில் அமலாக்கப்பிரிவு சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில் சிவக்குமார் மீதான விசாரணை இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்றும் நீதிமன்றக் காவலில் எடுத்து அவரை விசாரிக்க வேண்டும் எனவும் அனுமதி கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஆட்சியில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக செயல்பட்டவருமான டி.கே.சிவக்குமார் வீடுகளில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் அவரது டெல்லி வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.8.59 கோடி பணம் சிக்கியது.

இதுகுறித்து அமலாக்கத்துறையினர், டி.கே.சிவக்குமார் மீது சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கை பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x