

புதுடெல்லி,
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வானில் இருந்து வானில் உள்ள இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் அஸ்தரா ஏவுகணையை ஏவி இந்தி விமானப்படை வெற்றிகரமாக பரிசோதித்தது.
ஒடிசா கடற்கரையில், வங்காள விரிகுடா கடலில் இந்த அஸ்த்ரா ஏவுகணை பரிசோதனை இன்று செய்யப்பட்டது. சுகோப்-39எம்கேஐ விமானத்தில் மூலம் ஏவுகணைகள் செலுத்தப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை இந்த ஏவுகணைகள் வெற்றிகரமாக தாக்கி அழித்தன என்று பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்தன
இதுகுறித்து பாதுகாப்புதுறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், " வானில் இருந்து வானில் உள்ள இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் இந்த அஸ்த்ரா ஏவுகணை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது. விண்ணில் செலுத்தும் போது மிக்சிறப்பாக ஏவுகணை சென்று துல்லியமாக இலக்குகளை தாக்கி அழித்தது.
பல்வேறு ராடார்கள், மின்னனு கண்காணிப்பு முறை, சென்சார் ஆகியவை மூலம் ஏவுகணைய பின்தொடர்ந்ததில் இலக்கை துல்லியமாகத் தாக்கியது தெரியவந்தது. இந்த ஏவுகணையை பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் வரும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கியுள்ளது" எனத் தெரிவித்தார்.
இந்தியா உள்நாட்டில் தயாரிக்கும் அஸ்த்ரா ஏவுகணை குறுகிய தொலைவு மற்றும் நீண்ட தொலைவு இலக்குகளை சென்று தாக்கும் இருபிரிவுகளில் இருக்கின்றன. இன்று சோதனை செய்யப்பட்ட அஸ்த்ரா ஏவுகணையின் இலக்கு 70 கி.மீ தொலைவாகும். மணிக்கு 5,555 கி.மீ வேகத்தில் வானில் செல்லக்கூடியது. ஏறக்குறைய 15 கிலோ வெடிபொருட்களை இதில் சுமந்து செல்லும் தன்மை கொண்டது
ஐஏஎன்எஸ்