Published : 17 Sep 2019 05:07 PM
Last Updated : 17 Sep 2019 05:07 PM

அலிகார் ரயில் நிலையத்தில் ஒரு குடும்பத்தினர் மீது அடையாளம் தெரியாத 15 நபர்கள் தாக்குதல்

ஞாயிறன்று கன்னவ்ஜிலிருந்து ரயிலில் சென்ற முஸ்லிம் குடும்பத்தினர் அலிகார் ரயில் நிலையத்தில் இறங்கிய போது கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சுமார் 15 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாகவும் ஆனால் எதற்காகத் தாக்கினார்கள் என்பது தெரியவில்லை என்றும் குடும்பத்தினர் செய்தி ஏஜென்சியிடம் தெரிவித்தனர்.

நேரில் பார்த்த ஒருவரும் இந்தத் தாக்குதலை உறுதி செய்துள்ளார். குடும்பத்தினரில் 2 பெண்கள், 2 ஆண்கள் இருந்தனர், இவர்களில் ஒருவருக்கு சிகிச்சைத் தேவைப்பட்டதால் அலிகாருக்கு ரயிலில் வந்ததாகத் தெரிகிறது.

தாக்கப்பட்டதையடுத்து இவர்கள் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து காவல் நிலைய காவலதிகாரி யஷ்பால் சிங், தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, “தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பதைக் காண சிசிடிவி பதிவுகள் ஆராயப்படவுள்ளன. தகராறு காரணமாக இந்த அடிதடி நிகழ்ந்திருக்கலாம், எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார். இதனையடுத்து அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக மாணவர்கள் அமைதிப் பேரணி மேற்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x