

மகாராஷ்டிராவில் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கடலை மிட்டாயில் கலப்படம் நிகழ்ந்துள்ளதாக சில நாட்களுக்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டது. அந்த உணவுப் பொருட்களை ஆய்வு செய்த 2 ஆய்வகங்கள் அவற்றில் கலப்படம் எதுவும் இல்லை என்று நேற்று தெரிவித்துள்ளன.
மகாராஷ்டிரா அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு சில நாட்களுக்கு முன்பு கடலை மிட்டாய் விநியோ கிக்கப்பட்டது. ஆனால் அவற்றில் மண் உள்ளிட்ட சில கலப்பட பொருட் கள் இருந்ததாக அம்மாவட்டத்தின் மாவட்ட கவுன்சிலர் மணிஷா குந்த் புகார் எழுப்பியிருந்தார்.
இதைத் தொடர்ந்து மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் துறைக்கு அந்த புகார் அனுப்பப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் அத்துறையின் அமைச்சர் பங்கஜா முண்டே ரூ.206 கோடிக்கு எந்த வித ஒப்பந்தப் புள்ளிகளும் கோராமல் மாநிலத்தின் பள்ளிகளுக்கு சரக்குகள் வாங்கியதாகத் தகவல்கள் வெளியாயின.
ஆனால் இவற்றை மறுத்த பங்கஜா முண்டே மேற்கண்ட கடலை மிட்டாய்களை ஐந்து அரசு ஆய்வகங்களுக்கு பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தார்.
அவற்றைப் பரிசோதித்த நாசிக் மற்றும் புனே ஆய்வகங்கள், அந்த கடலை மிட்டாய்களில் எந்த கலப் படமும் இல்லை என்று நேற்று தெரிவித்தன. ஆனால் இதனை ஏற்காத மணிஷா குந்த் மேலும் மூன்று ஆய்வகங்களில் இருந்து முடிவுகள் வருவதற்குக் காத்திருப் பதாகக் கூறியுள்ளார்.