

பிரதமர் மோடியின் பிறந்தநாளில் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங், ஷிகர் தவண் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இவர்களுடன் இன்னும் சில விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் தங்களின் வாழ்த்தைப் பதிவு செய்துள்ளனர்.
அவற்றின் தொகுப்பு:
கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், "நமது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நமது தேசத்தை உயரே கொண்டு செல்லும் அவரின் முயற்சியில் அவருக்கு நல் ஆரோக்கியமும், வெற்றியும் கிட்ட வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் "இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மோடிஜி. தங்களின் தூய்மை இந்தியா, ஆரோக்கிய இந்தியா திட்டங்கள் எங்கள் அனைவருக்கும் சிறந்த முன் உதாரணம். ஆரோக்கியம் சிறக்க வாழ்த்துகள்" என ட்வீட் செய்துள்ளார்.
ஷிகர் தவண் தனது ட்விட்டர் பக்கத்தில், "மாண்புமிகு பிரதமருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நம் தேசத்தை முன் எப்போதையும்விட வளர்ச்சி காண செய்யும் தங்கள் முயற்சிகளுக்கு நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.
தடகள வீராங்கனை ஹிமா தாஸ் "மாண்புமிகு பிரதமர் மோடிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியமான வாழ்வுக்கும் வாழ்த்துகிறேன்" என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் பல விளையாட்டு பிரபலங்கள் தொடர்ந்து தங்களின் வாழ்த்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
- ஏஎன்ஐ