400 ரயில் நிலையங்களை புதுப்பிக்க அரசு ஒப்புதல்

400 ரயில் நிலையங்களை புதுப்பிக்க அரசு ஒப்புதல்
Updated on
1 min read

மெட்ரோ நகரங்கள், மற்றும் பெருநகரங்கள், ஆன்மிக தலங்கள் சுற்றுலா தலங்களில் உள்ள 400 ரயில் நிலையங்களை புதிதாக மேம்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் வழங்கியது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று கூடிய அமைச்சரவை இதற்கான ஒப்புதலை வழங்கியது.

இதன்படி விருப்பமுள்ள நபர்கள் வெளிப்படையான ஏல முறையில் பங்கேற்று சொந்தமாக வடிவமைப்புத் திட்டம், வர்த்தக ரீதியான யோசனைகளை உருவாக்கிக்கொண்டு இந்த ரயில் நிலையங்களை புதுப்பிக்கலாம். ரயில்வே சொத்துகளை வர்த்தக ரீதியில் மேம்படுத்தும் பணியை மண்டல ரயில்வே அனுமதிக்கும்.

‘ஏ-1’, மற்றும் ‘ஏ’ பிரிவைச் சேர்ந்த 400 ரயில் நிலையங்கள் இந்த மறு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வரும்.

ரயில்நிலையங்களைச் சுற்றி யுள்ள நிலம், வான் பகுதிகளை இத்திட்டத்தில் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். இந்த மேம்பாட்டுத் திட்டங்களால் ரயில்வே துறைக்கு செலவு ஏற்படாது.

295 சட்டங்கள் நீக்கம்

காலாவதியான 295 சட்டங்களை நீக்க மத்திய அமைச்சரவை ஒப்பு தல் அளித்துள்ளது. தேவையற்ற சட்டங்களை மத்திய அரசு நீக்கி வரும் நிலையில், மேலும் 295 சட்டங்களை நீக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித் துள்ளது. இதற்கான 4-வது சட்ட திருத்த மசோதா மூலம் இச்சட்டங் கள் நீக்கப்பட உள்ளன.

சட்ட அமைச்சகத்தின் நாடாளு மன்றத் துறை அளித்துள்ள தகவ லின்படி இதுவரை 125 வழக்கொழிந்த சட்டங்கள் நீக்கப் பட்டுள்ளன. மேலும் 2 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் வழக்கொழிந்த 945 சட்டங்கள் நீக்கப்படும்.

தற்காலத்துக்கு பொருந்தாத சட்டங்கள் என மேலும் 1,871 சட்டங்கள் அடையாளம் காணப் பட்டுள்ளன.

கடந்த 1950-ம் ஆண்டு முதல் 2001 வரை 100க்கும் அதிகமான சட்டங்கள் இதுபோன்று நீக்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in