ஆஞ்சநேயருக்கு 1.25 கிலோவில் தங்கக் கிரீடம்: பிரதமர் மோடி பிறந்தநாளில் அவருடைய ஆதரவாளர் தானம்

ஆஞ்சநேயருக்கு 1.25 கிலோவில் தங்கக் கிரீடம்: பிரதமர் மோடி பிறந்தநாளில் அவருடைய ஆதரவாளர் தானம்
Updated on
1 min read

காசி

பிரதமர் மோடியின் பிறந்தநாளை ஒட்டி அனுமன் சிலைக்கு தங்கக் கிரீடம் தானமாக வழங்கியிருக்கிறார் அவரின் தீவிர ஆதரவாளர்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்.17) தனது 59-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இதனையொட்டி அவரின் தீவிர ஆதரவாளர் ஒருவர் வாரணாசி சங்கட் மோச்சன் அனுமன் சிலைக்கு 1.25 கிலோ எடையில் தங்கத்தில் கிரீடம் செய்து தானமாக வழங்கியிருக்கிறார்.

வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி 2-வது முறையாக மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால் தங்கக் கிரீடம் செய்து அதை அனுமனுக்கு தானமாக வழங்குவதாக நேர்த்திக்கடன் செய்ததாகவும் அதன்படி அதனை அவருடைய பிறந்தநாளில் வழங்குவதாகவும் கூறினார் அரவிந்த் சிங் என்ற மோடி ஆதரவாளர்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அரவிந்த் சிங் அளித்த பேட்டியில், "கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா எப்படியெல்லாம் வளர்ச்சி கண்டிருக்க வேண்டுமோ அதை இப்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. அதனாலேயே ஆஞ்சநேயருக்கு தங்கக் கிரீடம் தானமாக வழங்க வேண்டும் என முடிவு செய்தேன்.

தங்கத்தைப் போல் இந்தியாவின் எதிர்காலமும் ஜொலிக்கும். காசி நகரத்து மக்களின் சார்பாக இந்த க்ரீடத்தை நான் தானமாக வழங்குகிறேன்" எனக் கூறினார்.

-ஏஎன்ஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in