Published : 17 Sep 2019 10:59 AM
Last Updated : 17 Sep 2019 10:59 AM

ராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்: பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் 6 பேரும் காங்கிரஸில் இணைந்தனர்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்


ஜெய்பூர்


ராஜஸ்தான் அரசியலில் மகிப்பெரிய திருப்பமாக, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் எம்எல்ஏக்கள் 6 பேரும் ஒட்டுமொத்தாக தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டனர்.

ஒட்டுமொத்த பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்களும் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டதால், அவர்கள் மீது கட்சித் தாவல் நடவடிக்கை எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் ராஜேந்திர சிங் குடா, ஜோகிந்திர் சிங் அவானா, வஜிப் அலி, லகான் சிங் மீனா, சந்தீப் யாதவ், தீப்சந்த் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

இதனால், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கும், காங்கிரஸ் கட்சித் தலைமைக்கும் இடையே இனிவரும் நாட்களில் உரசல் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால், 200 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் அந்த கட்சியின் பலம் 106 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் 6 பேரும் தங்களின் கடிதத்தை பேரவைத் தலைவர் சி.பி. ஜோஷியிடம் நேற்று நள்ளிரவு சென்று வழங்கினார்கள்.

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 100 இடங்களில் வென்று, ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில், வெளியில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சியும், ராஷ்ட்ரி லோக் தளம் கட்சியும் ஆதரவு அளித்துவந்தன. இப்போது 6 எம்எலஏக்களும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளதால், வரும் நவம்பர் மாதம் நடக்கும் நகராட்சித் தேர்தல், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கும் பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரஸ் நம்பிக்கையுடன் போட்டியிடும்

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், " பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் 6 பேரும் முதல்வர் அசோக் கெலாட்டுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து பேசி வந்தனர். இப்போது, சரியான நேரத்தில் கட்சியில் இணைந்துள்ளனர்" எனத் தெரிவித்தார்

பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ஜோகிந்தர் சிங் அவானா நிருபர்களிடம் கூறுகையில், " நீண்டகாலமாக எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் கூடி ஆலோசித்துதான் இந்த முடிவுக்கு வந்தோம். எங்களின் தொகுதி நலனுக்காகவே நாங்கள் இணைந்துள்ளோம். முதல்வர் கெலாட் ஏற்கெனவே ஏராளமான உதவிகளைச் செய்துள்ளார். எங்களை மாற்றுக்கட்சியினர் என்று பாகுபாடு பார்க்காமல் உதவிகள் செய்தார். முதல்வர் கெலாட்டுடன் நேற்று மாலை ஆலோசித்த பின்புதான் நாங்கள் பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்தோம்" என்று தெரிவித்தார்

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x