Published : 17 Sep 2019 10:51 AM
Last Updated : 17 Sep 2019 10:51 AM

தொலைந்த, திருடு போன செல்போன்களை கண்டறிய புதிய இணையதளம் அறிமுகம்

புதுடெல்லி

தொலைந்த, திருடு போன செல்போன்களை கண்டறிய புதிய இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளத்தை மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அண்மையில் மகாராஷ்டிராவில் அறிமுகம் செய்தார். நாம் தொலைத்த அல்லது திருட்டு கொடுத்த செல்போன் விவரங்களை இந்த இணையதளத்தில் கொடுக்கும்போது அதைக் கண்டறிய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மத்திய தொலை தொடர்புத்துறை இதற்கான முயற்சியை எடுத்துள்ளது.

இதுபோன்ற சேவையை மகாராஷ்டிர மாநில அரசு 2017 முதல் வழங்கி வருகிறது. எனவே மகாராஷ்டிராவில் இந்த சேவை, மத்திய அரசு சார்பில் அண்மையில் தொடங்கப்பட்டது. இதற்காக மத்திய கருவி அடையாளப் பதிவேடு (சிஇஐஆர்) என்ற பெயரில் கோடிக்கணக்கான செல்போன் ஐஎம்இஐ எண்கள் அடங்கிய தரவுகள் தொகுக்கப்
பட்டுள்ளன.

திருடு போன அல்லது தொலைந்து போன செல்போனை எடுத்தவர்கள் அதைப் பயன்படுத்தும்போது ஐஎம்இஐ எண் மூலம் இந்த இணையதளத்தால் எளிதில் கண்டறிய முடியும். முதலில் தொலைந்து செல்போன் குறித்து போலீஸில் புகார் தரவேண்டும். பின்னர் மத்திய தொலைதொடர்பு துறையைத் தொடர்புகொண்டு தொலைந்து போன செல்போன் விவரங்களைத் தரவேண்டும். இதற்காக 14422 என்ற ஹெல்பைன் எண் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் சம்பந்தப்பட்ட செல்போனின் ஐஎம்இஐ எண்கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும். இதன்மூலம் செல்போனை எடுத்த நபர், இந்த செல்போனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

இந்த புதிய இணையதளம் மூலம் சம்பந்தப்பட்டவர்களின் செல்போன்களில் இருந்து தகவல் களைத் திருடுவது, 3-வது நபருக்கு விற்பது தடுக்கப்படும். திருடு போன செல்போனை திருடியவர் பயன்படுத்த நினைக்கும்போது அவர் எளிதில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. மத்திய அரசு இணையதளம் மூலம் சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு தகவல் அனுப்பி அதன்மூலம் செல்போனை எடுத்தவர் அல்லது திருடியவர் சிக்கிக் கொள்வர். விரைவில் அனைத்து மாநிலங்
களிலும் இதை பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x