

புதுடெல்லி
காஷ்மீர் உயர் நீதிமன்றத்தை பொதுமக்கள் அணுக முடிய வில்லை என்ற குற்றச்சாட்டு மிக வும் தீவிரமானது என்றும் தேவைப் பட்டால் நானே அங்கு செல்வேன் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந் தஸ்தை ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்தும் அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப் பாடுகளை நீக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் தலைமை நீதி பதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் ஏஸ்.ஏ.பாப்டே மற்றும் எஸ்.அப் துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசா ரணைக்கு வந்தன.
காஷ்மீரில் செல்போன், இணையதள சேவை, பொது வாகன போக்குவரத்து ஆகி யவை இயங்கவில்லை. பத்திரிகை யாளர்கள் சுதந்திரமாக செய்தி சேக ரிக்க முடியாத நிலை உள்ளது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிடும்போது, “காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காஷ்மீரில் நாளிதழ்கள் வழக்கம்போல வெளிவருகின்றன. அவர்களுக்கு தேவையான உதவி களை அரசு செய்து வருகிறது.
மாநில அரசு மீது பிரிவினை வாதிகள், எல்லைக்கு அப்பால் உள்ள தீவிரவாதிகள் மற்றும் உள் ளூர் தீவிரவாதிகள் என மும்முனை தாக்குதல் நடத்தப்படுகிறது. கடந்த 1990 முதல் கடந்த மாதம் 5-ம் தேதி வரையில் 71,038 தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது. இதில் 5,292 பாதுகாப்புப் படை வீரர்கள், 14,038 பொதுமக்கள், 22,536 தீவிர வாதிகள் என மொத்தம் 41,866 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தடுக்கவே சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது” என்றார்.
காஷ்மீர் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடும்போது, “மனுதாரர் கள் சார்பில் கூறப்படும் குற்றச் சாட்டுகள் தவறானவை. காஷ்மீரில் கடந்த மாதம் 5-ம் தேதிக்குப் பிறகு ஒரு துப்பாக்கி தோட்டா கூட பயன்படுத்தப்படவில்லை. மருந்து பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன” என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் கூறும் போது, “காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது மற்றும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட தற்கு அரசு கூறும் காரணங்கள் சரியானவைதான். எனினும், இந்த விவகாரத்தில் இதுவரை மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண் டும். மேலும் காஷ்மீரில் விரைவாக இயல்புநிலை திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் நாட்டு நலனை கருத்தில் கொண்டு படிப்படியாக இந்த நடவடிக் கையை மேற்கொள்ள வேண்டும்’’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
குழந்தைகள் உரிமை நிபுணர் இனாக் ஷி கங்குலி மற்றும் பேரா சிரியர் சாந்தா சின்ஹா ஆகியோர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், “காஷ்மீரில் 18 வயதுக்குக் குறைவான குழந்தைகள் (சிறார்) சட்டவிரோதமாக தடுப்புக் காவ லில் வைக்கப்பட்டுள்ளனர்” என கூறியிருந்தனர்.
இந்த மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹுசேபா அகமதி வாதாடும்போது, “காஷ்மீரில் உள்ள உயர் நீதி மன்றத்தை அணுக மிகவும் சிரம மாக உள்ளது” என்றார்.
பின்னர் நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறும்போது, “உயர் நீதிமன்றத்துக்கு செல்ல முடிய வில்லை என கூறுகிறீர்கள். , இது மிகவும் தீவிரமான பிரச்சினை. இந்த விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதி மன்ற தலைமை நீதிபதிக்கு உத்தர விடப்படுகிறது. தேவைப்பட்டால் நானே அங்கு செல்வேன். அதே நேரம் நீங்கள் கூறும் குற்றச் சாட்டில் உண்மை இல்லை என தெரியவந்தால் அதன் விளைவு களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்” என்றார்.