Published : 17 Sep 2019 09:38 AM
Last Updated : 17 Sep 2019 09:38 AM

நிலவுக்கு இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 : விக்ரம் லேண்டர் விழுந்த பகுதியை நாசாவின் ஆர்பிட்டர் இன்று கடக்கிறது - முக்கிய படங்கள், தகவல்கள் கிடைக்குமா?

புதுடெல்லி

நிலவில் சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் விழுந்து கிடக்கும் இடத் துக்கு மேலே நாசாவின் ஆர்பிட் டர் இன்று கடக்க உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் முக்கிய படங் கள், தகவல்களை இஸ்ரோவுடன் பகிர்ந்து கொள்வோம் என்று நாசா தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத் தியது. இதில் நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர், நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர், அதற்குள் பிரக் யான் எனப்படும் நிலவில் தரை யிறங்கி ஆய்வு செய்யும் ரோவர் ஆகியவை அனுப்பப்பட்டன.

திட்டமிட்டபடி சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து ஆர்பிட்டர் பிரிந்து நிலவை சுற்றிவரத் தொடங் கியது. அதேபோல் லேண்டர் பிரிந்து நிலவின் தென் துருவத்தை நோக்கி பயணத்தைத் தொடங்கியது. நில வின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட முதல் லேண்டர் இதுதான். கடந்த 7-ம் தேதி விக்ரம் லேண்டர் தரையிறங்கியது. உல கமே அந்த நிகழ்ச்சியைப் பார்த் துக் கொண்டிருந்தது. இந்நிகழ்ச் சியை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து பிரத மர் மோடியும் பார்த்துக் கொண் டிருந்தார்.

ஆனால், நிலவின் தரைப்பகுதி யில் இருந்து சுமார் 2.1 கி.மீ. உய ரத்தில் லேண்டர் வரும் போது திடீ ரென சமிக்ஞை துண்டிக்கப்பட் டது. இதனால் இஸ்ரோ தலைவர் கே.சிவன் உட்பட விஞ்ஞானிகள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந் தனர். நிலவில் ‘சாப்ட் லேண்டிங்’ எனப்படும் மெதுவாகத் தரையிறங் குவதற்குப் பதில், வேகமாக தரையிறங்கி (ஹார்ட் லேண்டிங்) விழுந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், நிலவின் தரையைத் தொடுவதற்கு 335 மீட்டர் உயரத்தில் தான் சமிக்ஞை துண்டிக்கப்பட்ட தாகத் தகவல்கள் வெளியாயின.

அதன்பின், சந்திரயான்-2 ஆர் பிட்டர் மூலம் லேண்டர் விழுந்து கிடக்கும் இடத்தை இஸ்ரோ கண்டுபிடித்தது. நிலவில் ரோவர் ஒரு நாள் ஆய்வு செய்யும் வகை யில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலவில் ஒரு நாள் என்பது பூமியில் 14 நாட்களாகும். எனவே, 14 நாட் களுக்குள் லேண்டருடன் சமிக் ஞையை ஏற்படுத்த இஸ்ரோ தீவிர முயற்சி செய்து வருகிறது.

இதற்கிடையில், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசாவும் இஸ்ரோவுக்கு உதவ முன்வந்துள்ளது. நாசாவின் சார் பில் ஏற்கெனவே கடந்த 2009-ம் ஆண்டு அனுப்பப்பட்டுள்ள ‘நிலவு புலனாய்வு ஆர்பிட்டர்’ (எல்ஆர்ஓ), நிலவைச் சுற்றி ஆய்வு செய்து வருகிறது. நாசாவின் ஆர்பிட்டர் நிலவின் தென் துருவப் பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்து கிடக்கும் பகுதிக்கு மேலே இன்று கடக்க உள்ளது.

அப்போது, விக்ரம் லேண்டரை நாசாவின் ஆர்பிட்டர் படம் பிடித்து அனுப்பும் என்றும், அதனுடன் சமிக்ஞை தொடர்பை ஏற்படுத்த முயற்சிக்கும் என்றும் நாசா தெரி வித்துள்ளது. ஏற்கெனவே, விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற் படுத்த, ‘ஹலோ’ என்று ரேடியோ தகவலை நாசா அனுப்பி உள்ளது.

‘‘சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் குறித்த படங்கள், தகவல்கள் என எது கிடைத்தாலும் இஸ்ரோவுடன் பகிர்ந்து கொள்வோம்’’ என்று நாசாவின் எல்ஆர்ஓ திட்ட விஞ் ஞானி நோவா பெட்ரோ கூறிய தாக ‘ஸ்பேஸ்பிளைட்நவ்.காம்’ இணையதளம் கூறியுள்ளது.

இதற்கிடையில் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x