

புதுடெல்லி
அயோத்தி நிலப்பிரச்சினை தொடர் பான வழக்கு விசாரணையை நேரலை செய்வதற்கான வாய்ப்பு கள் எந்த அளவுக்கு உள்ளன என்பது குறித்து அறிக்கை அளிக்க பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, மூலவர் ராம் லல்லா ஆகிய மூன்று அமைப்பினரும் உரிமை கோரி வருகின்றனர். இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
வீடியோவில்...
இந்த வழக்கின் நீதிமன்ற விசா ரணையை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் அல்லது நேரலை யில் ஒளிபரப்பு செய்ய வேண் டும் என்று கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவர் கே.என்.கோவிந்தாச் சார்யா, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நேற்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், அயோத்தி வழக்கை நேரலை செய் வது தொடர்பான கோரிக்கையை இந்த அமர்வு பரிசீலிக்கும் என்று உத்தரவிட்டார். மேலும் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்துக்கு உரிமை கோரும் அயோத்தி வழக்கின் விசார ணையை நேரலை செய்வதற்கான வாய்ப்புகள் எந்த அளவுக்கு உள் ளன என்பது குறித்து அறிக்கையை உச்ச நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்யவேண்டும் என்றும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.