Published : 16 Sep 2019 07:47 PM
Last Updated : 16 Sep 2019 07:47 PM

குஜராத் சர்தார் சரோவர் அணைக்கட்டுக்கு பிரதமர் வருகையின் போது மத்திய பிரதேசத்தில் போராட்டப் பேரணி

போபால், பிடிஐ

குஜராத் சர்தார் சரோவர் அணைக்கட்டுக்கு தனது பிறந்தநாளை முன்னிட்டும் மகோத்சவத்தை முன்னிட்டும் வருகை தருகிறார் பிரதமர் நரேந்திர மோடி, இதனையடுத்து நர்மதா பச்சாவ் ஆந்தோலன் அமைப்பினர் மோடிக்கு எதிராக ஆர்பாட்டம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

அதாவது நர்மதை ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணைக்கட்டின் மதகுகள் திறக்கப்பட வேண்டும் ஏனெனில் மத்திய பிரதேசத்தில் இதன் கழிமுகத்தில் இருக்கும் 178 கிராமங்கள் முழுதுமோ பகுதியளவோ வெள்ள நீரில் மூழ்கியிருப்பதாக நர்மதா பச்சாவ் ஆந்தோலன் அமைப்பினர் பேரணி நடத்தவிருப்பதாக சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.

நர்மதா அணைக்கட்டு அதன் முழு அளவான 138.68 மீட்டர் நீர்மட்டத்தை எட்டியதை அங்கு கொண்டாடவிருக்கின்றனர், இந்த நிகழ்வை முன்னிட்டுத்தான் தன் பிறந்த தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

“நாங்கள் மோடிஜியின் பிறந்த தினக் கொண்டாட்டத்தின் போது பர்வானியில் எதிர்ப்புப் பேரணி நடத்த முடிவு செய்திருப்பதாக நர்மதா பச்சாவ் ஆந்தோலன் அமைப்பின் தலைவர் மேதா பட்கர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தொலைபேசியில் தெரிவித்தார்.

கடந்த மாதம் சர்தார் அணைக்கட்டு திறக்கப்பட்டு மத்தியப் பிரதேசத்தில் அதன் கழிமுக கிராமங்கள் மூழ்காமல் காக்க வேண்டும் என்று பர்வானியில் மேதா பட்கர் உள்ளிட்டோர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். செப்டம்பர் 2ம் தேதி 9ம் நாள் இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது, காரணம் மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசு குஜராத் அரசுடன் பேசி இவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

நர்மதா கட்டுப்பாட்டு ஆணையம் 2014ம் ஆண்டு அணையின் அளவை 121.92 மீட்டர்களிலிருந்து 138.68 மீட்டர்களாக அதிகரிக்கப்பட அனுமதி அளித்தது. இந்த அணைக்கட்டு பிரதமர் மோடியினால் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 17-ல் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து குஜராத் முதல்வர் விஜய் ருபானி கூறும்போது, “இன்று அணையின் மதகுகள் மூடியுள்ளன, ஆனால் குஜராத் மாநில வளர்ச்சிக் கதவுகள் இதனால் திறந்தது. இந்தத் திட்டம் குஜராத்துக்கு வாழ்வளித்த திட்டமாகும். ஆகவே இது வரலாற்று சிறப்பு மிக்க நாள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x