Published : 16 Sep 2019 04:29 PM
Last Updated : 16 Sep 2019 04:29 PM

பொருளாதார மந்தநிலைக்கு எதிராக நாடுதழுவிய போராட்டம்:  இடதுசாரிகள் கூட்டறிக்கை

புதுடெல்லி

பொருளாதார மந்தநிலைக்கு எதிராக நாடுதழுவிய போராட்டம் நடத்தவிருப்பதாக இடதுசாரிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை வரும் 20-ம் தேதி நடத்த மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள கூட்டறிக்கையில் அறிக்கையில், "ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை உபயோகிக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு பொருளாதார சிக்கலை மேலும் தீவிரப்படுத்துமே தவிர சிக்கலைத் தீர்க்க உதவாது.

இப்போதைய தேவை பொதுத்துறை நிறுவனங்களை மீட்டெடுத்து வேலை வாய்ப்புகளை பெருக்குவதே ஆகும். வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதன் மூலம் மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க வேண்டும்.

பொருளாதார மந்தநிலையைக் கண்டித்து இடதுசாரிகள் போராட்டம் நடத்தவுள்ளது. இதில் ஜனநாயக சக்திகள் கலந்துகொள்ள வேண்டுகோள் விடுக்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

-ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x