

லக்னோ
நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, பிரதமராக அவர் செய்த சாதனைகள் அடங்கிய புகைப்பட கண்காட்சி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இதனை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைக்கிறார். அவருடன் நிகழ்ச்சியில் மாநில பாஜக தலைவர் ஸ்வதந்தரா தேவ் சிங், மாநில பாஜக பொதுச் செயலாளர் சுனில் பன்ஸார் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை, (செப்-17) தனது 69-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். அதை முன்னிட்டு பாஜக சார்பில் நாடு முழுவதும் சேவை வாரம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, பிரதமராக, மோடி செய்த சாதனைகள் அடங்கிய புகைப்பட கண்காட்சி இன்று (திங்கள்கிழமை) லக்னோவில் நடைபெறுகிறது. முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற இந்த கண்காட்சியை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஎன்ஐ