Published : 15 Sep 2019 02:49 PM
Last Updated : 15 Sep 2019 02:49 PM

இந்த ஆண்டில் 2 ஆயிரம் முறைக்கு மேல் பாகிஸ்தான் அத்துமீறல்; துப்பாக்கிச்சூட்டில் 21 இந்தியர்கள் கொலை: மத்திய அரசு குற்றச்சாட்டு

புதுடெல்லி,

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்த ஆண்டு மட்டும் 2,050 முறை பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி 21 அப்பாவி மக்களை கொலை செய்துள்ளது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

மத்தியவெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த 2003-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் தொடர்ந்து மீறி வருகிறது. இந்த ஒப்பந்தத்தை மதிக்காமல், சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தான் ராணுவம் 2,050 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை 21 இந்திய அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
2003-ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து, புரிந்து கொண்டு சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியிலும், சர்வதேச எல்லைப்பகுதியிலும் அமைதி நிலவ ஒத்துழையுங்கள் என்று பலமுறை பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்துவிட்டோம்.

ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை பாகிஸ்தானின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும்விதமாகவேவும், இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவாமல் தடுப்பு நடவடிக்கையில் மட்டுமே ஈடுபடுகிறது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x