Published : 15 Sep 2019 12:41 PM
Last Updated : 15 Sep 2019 12:41 PM

ராணுவப் படைப் பிரிவில் 9 ஆண்டுகள் பணியாற்றிய டச்சு நாய் மரணம்: ராஜ்நாத் சிங் இரங்கல்

புதுடெல்லி,

இந்திய ராணுவத்தில் 9 ஆண்டுகள் பணியாற்றி உயிரிழந்துள்ள டச்சு நாய்க்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது இரங்கலைத்தெரிவித்துள்ளார்

கொல்கத்தாவில் ராணுவ கிழக்கு கட்டளைப் பிரிவில் இருந்த டச்சு என்ற 9 வயது நாய் நேற்று காலை உயிரிழந்தது. பல்வேறு மிகச்சிறந்த சேவைகளினால் பல்வேறு படைப்பிரிவுகளில் மிகுந்த அன்பைப் பெற்றுள்ள டச்சு ஷெப்பர்டு வகையைச் சேர்ந்த மோப்ப நாய் இது. இந்த நாயின் இழப்பு ராணுவத்தினரிடையே மிகப்பெரிய சோதகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ட்விட்டர் பக்கங்களில் ராணுவ உயரதிகாரிகள் பலரும் தங்கள் கண்ணீர் அஞ்சலியை நாயின் பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு அதன் பெருமைகளைக் கூறி பதிவிட்டிருந்தனர்.

நேற்று சனிக்கிழமை கொல்கத்தா கிழக்கு கட்டளைப் பிரிவு உயர் ராணுவ அதிகாரிகள் மாலை அணிவித்து மலர்கள் தூவி நாயின் சடலத்திற்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தெரிவித்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''பல்வேறு சிஐ/சிடி ஆப்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதில் ராணுவத்தின் கருவியாக செயல்பட்டுவந்தது டச்சு நாய். கிழக்கு கட்டளைப் பிரிவில் கடந்த 9 ஆண்டுகளாக இந்த டச்சு நாய் ராணுவத்தினருக்கு மிகவும் உதவியாக இருந்து ராணுவத்தை பெருமைப்படுத்தியுள்ளது. தனது வீரதீர செயல்களினால் மேம்பட்ட வெடிக்கும் சாதனங்களை அடையாளம் காண்பதில் டச்சு முக்கிய பங்கு வகித்தது. டச்சு நாயின் இழப்புக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

இவ்வாறு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

-ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x