

புதுடெல்லி
உத்தரபிரதேச மாநிலத்தில் ‘நமோ ஒன்’ எனும் பெயரில் மூலிகை வனம் உருவாகவுள்ளது. இதை முன்னாள் மத்திய அமைச்ச ரான மேனகா காந்தி பிறந்தநாள் பரிசாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்க உள்ளார்.
பிரதமர் மோடியின் பிறந்த நாள் வரும் 17-ல் வருகிறது. இதற் காக பாஜகவின் மூத்த தலைவ ரான மேனகா காந்தி எம்.பி, தனது சுல்தான்பூர் மக்களவை தொகுதி யில் ஒரு மூலிகை வனத்தை உரு வாக்க உள்ளார். இதற்காக மாவட்ட அதிகாரிகள் 20 பிகா பரப்பளவில் காலியாக உள்ள அரசு நிலத்தை தேடி வருகின்றனர். இதில் செப்டம் பர் 17 அன்று சுமார் 1,500 பல்வேறு வகை மூலிகை செடிகளும், மரக் கன்றுகளும் நடப்பட உள்ளன. தனது முன்னிலையில் இவற்றை நடும் மேனகா அந்த வனத்திற்கு ‘நமோ ஒன்’ எனப் பெயரிட உள் ளார். இதை பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசாக்கும் வகையில் அரசு சார்பில் அவற்றை தனது நேரடிப் பராமரிப்பில் வளர்க்க உள்ளார்.
இது குறித்து மேனகா காந்தி கூறும்போது, ‘சுற்றுச்சூழல் மீதான எனது அன்பு மிகவும் பழமையா னது. மரம், செடி, கொடி மற்றும் விலங்குகள் போன்றன மனித உயிர்களை விட மதிப்புக் குறைந்த தல்ல. இதை அனைவரும் புரிந்துகொள்வது அவசியம். இவை எதுவும் இவ்வுலகில் இல்லை எனில் இங்கு மனிதர்களும் உயிர் வாழ்வது கடினம்.
பிரதமர் மோடியும் சுற்றுச்சூழல் ஆர்வலர். இவர், உலக வெப்பமய மாதலை தடுக்கும் வகையில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பணியில் கவனம் செலுத்தி வருகிறார். இத னால், அவருக்கு இந்த வனத்தை பிறந்தநாள் பரிசாக்க விரும்பு கிறேன்’ எனத் தெரிவித்தார்.
இந்த மூலிகை வனத்தில் துளசி, சந்தனம், மஞ்சள், பப்பாளி, கற் றாழை, அமுக்ரா கிழங்கு, தண்ணீர் விடான் கிழங்கு, சங்கு புஷ்பம், நெட்டிலிங்கம், அதிமதுரம், சர்ப கந்தா(விஷமுறிவு செடி), வல் லாரை, அசோகா, முருங்கை உள் ளிட்ட செடிகளும், மரக்கன்றுகளும் நடப்பட உள்ளன. தேசிய ஜன நாயக கூட்டணி ஒவ்வொரு முறை மத்தியில் அமையும்போதும் அமைச்சர் பதவி மேனகாவுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த முறை அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை என் பது நினைவுகூரத்தக்கது.