

ஜம்மு
காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவரின் துப்பாக்கியை பறித்துச் சென்ற தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட் டத்தின் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவராக இருப்பவர் ஷேக் நாசிர் உசேன். கவுரியான் கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உசேன் சென்றி ருந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் அதிகாலை 4 மணியளவில், அவரது வீட்டின் கதவை உடைத்து தீவிரவாதிகள் உள்ளே புகுந்தனர்.
அப்போது, உசேனின் பாதுகாப் புக்காக நியமிக்கப்பட்டிருக்கும் ராணுவ வீரர், அவர்களை தடுக்க முயன்றார். இதில் ஏற்பட்ட மோத லில், ராணுவ வீரரை தீவிரவாதிகள் கடுமையாக தாக்கிவிட்டு அவரிட மிருந்து துப்பாக்கியை பறித்துச் சென்றனர்.
இதுதொடர்பாக, அவர் அளித்த புகாரின்பேரில், தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட் டது. இந்நிலையில், தீவிரவாதிகள் தப்பிச் செல்வதற்கு பயன்படுத்தப் பட்ட கார், அங்குள்ள டூல் கிராமத் தில் நேற்று காலை கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து, டூல் கிரா மத்தை ராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று காலை அங்கு ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.
ராணுவ வீரரின் துப்பாக்கியை பறித்துச் சென்ற தீவிரவாதிகள் விரைவில் பிடிபடுவார்கள் என கிஷ்த்வார் மாவட்ட ஆட்சியர் அங்ரேஸ் சிங் ராணா தெரிவித் துள்ளார்.
பாக். அத்துமீறி தாக்குதல்
காஷ்மீர் எல்லைப் பகுதியை ஒட்டிய கிராமங்களில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.
- பிடிஐ