Published : 15 Sep 2019 11:40 AM
Last Updated : 15 Sep 2019 11:40 AM

வாகா கொடி இறக்க நிகழ்ச்சியை காண விஐபி நுழைவுச் சீட்டு பெயரில் பண மோசடி: எல்லை பாதுகாப்புப் படை எச்சரிக்கை

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி 

பஞ்சாபின் வாகா எல்லையில் கொடி இறக்க நிகழ்ச்சியை காண ‘விஐபி நுழைவுச் சீட்டு' பெயரில் பணம் வசூலித்து மோசடி நடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுற் றுலா பயணிகள் ஏமாற வேண் டாம் என்று எல்லை பாதுகாப்பு படையினர் (பிஎஸ்எப்) எச்சரித் துள்ளனர்.

பஞ்சாபின் அமிர்தசரஸில் இருந்து பாகிஸ்தானின் லாகூர் செல்லும் கிராண்ட் டிரங்க் சாலையில் வாகா எல்லை உள்ளது. அட்டாரி எனும் இடத்தில் உள்ள வாகா எல்லையில் நாள்தோறும் சூரிய அஸ்தமனத்தின்போது கொடி இறக்க நிகழ்ச்சி நடைபெற்று வரு கிறது. இந்த நிகழ்ச்சி, கடந்த 1959-ம் ஆண்டு முதல் நடை பெறுகிறது. இதில் இந்தியப் பகுதியில் பிஎஸ்எப், பாகிஸ் தான் பகுதியில் ரேஞ்சர் படை களின் வீரர்கள் பங்கேற்கின்றனர். அவரவர் எல்லைகளில் இரு நாடு களின் வீரர்களும் ஒரே நேரத் தில் அணிவகுப்பை நடத்துகின் றனர். பிறகு, தேசியக் கொடிகளை வணங்கி அதை இறக்கி அழகாக மடித்து வைக்கின்றனர். இதனை அருகில் இருந்து காண பொது மக்கள் ஏராளமாக கூடுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சுற்றுலாப் பயணிகள். தமிழகத்தில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

வாகா எல்லை கொடியிறக்க நிகழ்ச்சியை காண வரும் சுற்றுலா பயணிகளிடம் ‘விஐபி நுழைவுச் சீட்டு’ எனும் பெயரில் போலி சீட்டை அளித்து பணம் பறிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சீட்டை பெற்று வாகா எல்லையின் பார்வையாளர் பகுதியில் நுழை பவர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்திக்கின்றனர். முதலில் வருபவர் களுக்கு முன்னுரிமை எனும் அடிப் படையில் மட்டுமே இடம் ஒதுக்கப் படுகிறது. சிறப்பு ஒதுக்கீடு ஏதுவும் இல்லை. எனவே இந்த மோசடி தொடர்பாக பொதுமக்கள் விழிப் புணர்வுடன் இருக்கும்படி பிஎஸ்எப் எச்சரித்துள்ளது.

இடைத்தரகர்கள்

இது குறித்து பிஎஸ்எப் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கொடி இறக்க நிகழ்ச்சியை காண பொதுமக்களிடம் எந்தவிதக் கட்ட ணமும் வசூலிக்கப்படுவதில்லை. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளி டம் சில இடைத்தரகர்களும் ஏஜெண்டுகளும் விஐபி நுழைவுச் சீட்டு என்ற பெயரில் பண மோசடி செய்வது தெரியவந்துள்ளது. பொதுமக்கள் யாரிடமும் ஏமாறா மல் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 45 நிமிடங்கள் நடைபெறும் வாகா எல்லை கொடி இறக்க நிகழ்ச்சியானது, தேசப்பற்றை ஊட்டும் விதமாக அமைந்துள்ளது. இதன் முன்னதாக தேசப்பற்று தொடர்பான கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

கொடியிறக்க நிகழ்ச்சியை காண டெல்லி வரும் சுற்றுலாப்பயணிகள் ரயிலில் அமிர்தசரஸுக்கு பயணம் செய்கிறார்கள். அங்கிருந்து 27 கி.மீ தொலைவில் உள்ள வாகா எல்லையை கார் அல்லது பேருந்து மூலம் சென்றடைகின்றனர். முன்ன தாக அமிர்தசரஸில் உள்ள சீக்கியர் களின் புனிதத்தலமான பொற் கோயிலையும், அதன் அருகி லுள்ள ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த இடத்தையும் சுற்றுலா பயணிகள் பார்வை யிடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x