

புதுடெல்லி
ராஜஸ்தான், பிஹார் மாநில பாஜகவுக்கு புதிய தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா பிறப்பித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் நாடு முழுவதும் நிர்வாகி கள் மாற்றம் மற்றும் புதிய நிர் வாகிகள் நியமனங்களை பாஜக மேலிடம் செய்து வருகிறது. அந்த வகையில், ராஜஸ்தான் மற்றும் பிஹார் மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேற்று நியமனம் செய்து அறிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில தலைவ ராக சதீஷ் பூனியாவும், பிஹார் மாநில தலைவராக சஞ்சய் ஜெய்ஸ் வாலும் நியமிக்கப்பட்டுள்ளனர். பிஹார் மாநிலத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளக் கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலை சந்திக் கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிஹாரிலுள்ள பஷ்சிம் சம்பரன் மக்களவைத் தொகுதியின் எம்.பி. யாக இருப்பவர் சஞ்சய் ஜெய்ஸ்வால். தொடர்ந்து 3-வது முறையாக அந்தத் தொகுதியில் வெற்றி வாகை சூடி வருபவர் சஞ்சய். மேலும் அவருக்கு கட்சி மேலிடத்தில் நல்ல பெயர் இருப்பதால் அவருக்கு கட்சித் தலைமை பதவி கிடைத்துள்ளது.
அதேபோல ராஜஸ்தானின் ஆம்பேர் தொகுதி எம்.எல்ஏவாக இருப்பவர் சதீஷ் பூனியா. 55 வய தாகும் சதீஷ் பூனியா, ஜாட் சமூகத் தைச் சேர்ந்தவர். ராஜஸ்தான் மாநில பாஜக தலைவராக இருந்த மதன்லால் சைனி காலமானதால் இந்தப் பதவி சதீஷ் பூனியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது
- பிடிஐ