சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை
Updated on
1 min read

சத்தீஸ்கர் மாநிலத்தின் தந் தேவாடா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நேற்று நடந்த மோதலில் 2 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்.

தந்தேவாடா பாஜக எம்எல்ஏ பீமா மாண்டவி, கடந்த ஏப்ரல் மாதம் நக்சல் தாக்குதலில் உயிரிழந்ததால் அவரது தொகுதிக்கு வரும் 23-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள் ளது. இதையொட்டி நக்சலைட் களை தேடும் பணியை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி யுள்ளனர்.

இந்நிலையில் தந்தேவாடா மாவட்டம், கிரந்துல் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நக் சலைட்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டிருந்தனர். அப்போது குத்ரம் என்ற கிராமத் தில் அருகில் வனப் பகுதியில் பாதுகாப்பு படையினர் நக்ச லைட்கள் இடையே மோதல் ஏற் பட்டது. இதில் பாதுகாப்பு படை யினரின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் நக்சலைட்கள் இருளில் தப்பியோடினர். இதையடுத்து சம்பவ இடத்திலிருந்து 2 நக்ச லைட்களின் உடல்கள் மீட்கப் பட்டன. இவர்கள் லச்சு மாண்டவி மற்றும் பொடியா என அடையாளம் காணப்பட்டனர்.

இவர்கள் இருவரை பற்றிய தக வலுக்கு தலா ரூ.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்ததாக போலீ ஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திலிருந்து 2 துப்பாக்கிகள் கைப்பற்றப் பட்டன. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in