Published : 15 Sep 2019 10:54 AM
Last Updated : 15 Sep 2019 10:54 AM

மத்தியில் ஆள்பவர்களின் அறிக்கைகள் விந்தையாக, நகைப்புக்குரியதாக இருக்கிறது: நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் மீது யஷ்வந்த் சின்ஹா தாக்கு

இந்தூர்

மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பியூஷ் கோயல் அறிக்கைகள் விந்தையாகவும், நகைப்புக்குரியதாகவும் இருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா விமர்சித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 5 சதவீதமாகக் குறைந்தது. முக்கிய 8 துறைகளின் உற்பத்தியும் 2.5 சதவீதமாகச் சரிந்தது, ஆட்டமொபைல் துறையின் விற்பனையும் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக சரிந்து பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி நகர்ந்து வருகிறது.

ஆட்டோமொபைல் விற்பனை குறைவு குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் " ஓலா, உபர் நிறுவனங்களின் வருகையால்தான், மக்கள் கார் வாங்குவதை நிறுத்திவிட்டு வாடகைக் காரில் செல்கிறார்கள்" என்று தெரிவித்திருந்தார்.

அதேபோல மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஒரு நிகழ்ச்சியில் பொருளாதார வளர்ச்சிக் குறித்துப் பேசுகையில், அப்போது, அவர் கூறுகையில், " 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி டாலர்கள் பொருளாதாரமாக உயர்வடைவதன் பாதையில்தான் நாடு சென்று கொண்டிருக்கிறது தொலைக்காட்சியில் காட்டப்படும் அந்த கணக்கீடுகள் வழியில் செல்ல வேண்டியதில்லை, அதாவது 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற வேண்டுமெனில் 12 சதவீத பொருளாதார வளர்ச்சி தேவை என்ற கணக்கீடுகளை நாம் பார்க்க வேண்டியதில்லை. இத்தகைய ஜிடிபி கணக்குகளைப் பார்க்க வேண்டாம். இத்தகைய கணிதங்கள் ஐன்ஸ்டீன் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க உதவவில்லை" எனத் தெரிவித்தார்.

புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்த ஐசக் நியூட்டன் என்று சொல்வதற்கு பதிலாக, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்று பியூஷ் கோயல் கூறியதை சமூக ஊடங்களில் ஏராளமானோர் கிண்டல் செய்து ட்ரோல் செய்தார்கள்.

‘ஓலா, உபர்தான் ஆட்டோமொபைல் சரிவுக்குக் காரணம் என்றால் ட்ரக்குகள் விற்பனை சரிவு ஏன்?’

இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் நகரில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் முன்னாள் நிதிஅமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

மத்தியில் ஆளும் கட்சியில் இருக்கும் முக்கியமான பதவியில் இருப்பவர்கள் எல்லாம் விந்தையாக, நகைப்புரிய வகையில் பேசுகிறார்கள். இதுபோன்ற பதவியில் இருப்பவர்கள் பேசுவதால்தான் மட்டும் சிறந்த பொருளாதாரத்துக்கு நாட்டை அழைத்துச் செல்ல முடியாது. இதுபோன்ற பேச்சால், நிச்சயம் அரசின் தோற்றம் மக்கள் மத்தியில் மோசமாகும்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓலா, உபர் கார்கள் வருகையால்தான் கார்கள் விற்பனை குறைந்துவிட்டதாகக் கூறியுள்ளார். அப்படியென்றால், ஏன் டிரக்குகள், இருசக்கர வாகனங்கள் விற்பனை ஏன் குறைய வேண்டும்.
பிஹார் நிதியமைச்சர் சுஷில் மோடி, நாட்டின் பொருளாதாரச் சரிவுக்கு மழைக்காலம்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார், த்திய அமைச்சர் பியூஷ் கோயல், புவியீர்ப்பு விசை விதியை ஐன்ஸ்டீன் கண்டுபடித்தார் என்று பேசுகிறார்.

துபாயில் நடத்தப்படுவதைப் போல், மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழா நாட்டில் நடத்தி ஏற்றுமதிக்கு ஊக்கம் அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் பேசியுள்ளார். ஐக்கிய அரபு நாட்டின் பொருளாதாரமும், இந்தியாவின் பொருளாதாரமும் வேறு வேறு, நம்முடைய நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரும்பாலும் விவசாயிகளின் வளர்ச்சியால் மட்டுமே சாத்தியம்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்தபட்சம் 8 சதவீதத்திலாவது இருக்க வேண்டும். ஆனால், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5 சதவீதமாகவே இருந்து வருகிறது. நாம் அடையாமல் இருந்த 3 சதவீத பொருளாதார வளர்ச்சியின் மதிப்பு என்பது ஏறக்குறைய ரூ.6 லட்சம் கோடியை ஒரு காலாண்டில் இழந்திருக்கிறோம்.

வங்கிகள் இணைப்பை நான் எதிர்க்கவில்லை. அதேசமயம், வங்கிகள் இணைப்பு மூலம் வாராக்கடன் குறைந்துவிடும் என்று நினைப்பது தவறான கணிப்பு. இதுபோன்ற நடவடிக்கையால் வங்கிகளையும், அதில் உள்ள ஊழியர்களையும் அது பாதிக்கலாம்.

இவ்வாரு யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x