Published : 15 Sep 2019 10:12 AM
Last Updated : 15 Sep 2019 10:12 AM

தீவிரவாதத்தை நிறுத்தாவிட்டால், பாகிஸ்தான் பலதுண்டுகளாக சிதறுவதை யாராலும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

சூரத்

தீவிரவாதத்தை நிறுத்தாவிட்டால், பாகிஸ்தான் துண்டு, துண்டுகளாக சிதறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குஜராத் மாநிலம், சூரத் நகரில் பணியின்போது வீர மரணமடைந்த 122 ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை கவுரவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய பாதுகாப்பு துறை ராஜ்நாத் சிங் பேசியதாவது:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது மக்களுக்கு சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டாதீர்கள் என்று நல்ல அறிவுரை வழங்கி இருக்கிறார். ஏனென்றால், சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து, அவர்களை திரும்பிச் செல்லவிடமாட்டார்கள்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த 370 பிரிவை இந்தியா நீக்கியதை பாகிஸ்தானால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் ஐக்கிய நாடுகளில் தவறான பிரச்சாரத்தை முன்னெடுக்கிறது. ஆனால், சர்வதேச சமூகம் பாகிஸ்தான் சொல்வதை நம்ப முடியவில்லை.

சுதந்திரத்துக்குப்பின் இந்தியாவில் சிறுபான்மையினர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் சீக்கியர்கள், பவுத்தர்கள், இந்துக்களுக்கு உள்ளிட்ட சிறுபான்மையினருக்காக உரிமை மீறல்கள் ஏற்படுகின்றன

ஆனால் இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்கிறார்கள், இனிமேலும் தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பார்கள். மக்களை சாதிரீதியாகவும், மதரீதியாகவும் மக்களை இந்தியா ஒருபோதும் பிரிக்காது.

மதத்தின் அடிப்படையில் உருவாகிய பாகிஸ்தான் நாடு கடந்த 1971-ம் ஆண்டு இரு பிரிவுகளாகப் பிரிந்தது. அரசியலோடு மதம் கலந்து பாகிஸ்தான் இருப்பதால், பாகிஸ்தான் பல துண்டுகளாக சிதறுவதை தடுக்க முடியாது. அதிலும் தீவிரவாதத்தை நிறுத்தாவிட்டால், பாகிஸ்தான் எதிர்காலத்தில் பல்வேறு துண்டுகளாகச் சிதறுவதை யாராலும் தடுக்க முடியாது

இனிமேல், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் பேச்சுவார்த்தை என்றால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைப் பற்றி மட்டும்தான்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x